ஏப்ரல் 12, 2024 • Makkal Adhikaram
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. ஊழலுக்கு ஆதரவானது. அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பது எதற்கு? என்று கூட தெரியாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.நாட்டின் ஊழல் மக்களை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னால் இழுத்துச் செல்லும்.
இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை அரசியல் கட்சிகள் ஊழல் செய்வதற்கு, ஊழல் செய்த பணத்தை சொத்துக்களை முடக்குகின்ற அதிகாரம், நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் அமலாக்க துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது அதிக அதீத அதிகாரம் என்கிறார்கள். மக்களாட்சி என்றால், மக்கள் நலனில் ஆட்சி செய்பவர்களுக்கு தான் மக்களாட்சி .ஆனால், அரசியல் கட்சிகள் மூலம் மக்களின் அதிகாரங்களை பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு ஊழல் செய்தால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது போல தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது மிகப் பெரிய ஜனநாயகத்தின் கேவலம்.
அதாவது சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்க துறையின் அதிகாரங்களை குறைக்க வேண்டுமாம். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதை குறை பார்க்கலாம். அப்படியென்றால், அரசியலில் கொள்ளை அடிப்பதற்கு சட்டத்தின் மூலம் அங்கீகாரம் தேவையா ? இந்த சட்ட நடவடிக்கை இல்லையென்றால், ஊழலை அங்கீகரிப்பது தானே அர்த்தம் .எந்த அளவிற்கு மக்களை முட்டாளாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதுவே சாட்சி. மேலும்,
எந்த அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் மீது இன்னும் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பம் .ஒரு கௌரவமான பதவிக்கு வருபவர்கள், மக்களின் சேவைக்காக வருபவர்கள் ,பல ஆயிரம் கோடிகளை ஊழல் செய்வதற்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, இந்த சட்டங்களை இல்லை என்றால், மொத்தம் சுரண்டி எடுத்து வெள்ளைக்காரனை விட இந்த கொள்ளைக்காரர்கள் கொள்ளை அடித்து விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு இன்றைய அரசியல் தள்ளப்பட்டுள்ளது.இது நாட்டின் தற்போதைய அரசியலில் ,
வெள்ளைக்காரனுக்கும், இந்த அரசியல் கொள்ளைக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றுதான். அவன் இந்த தேசத்தையே ஒரு அந்நிய நாட்டின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி செய்தபோது இந்தியாவில் உள்ள அனைத்து வளங்களையும், சுரண்டி தன்னுடைய நாட்டுக்கு கொண்டு சென்று விட்டான் .இவர்கள் இந்த நாட்டு மக்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அரசியலில் ஊழல் கொள்ளைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .அந்த வகையில் பிஜேபி உண்மையிலேயே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ அதிகாரிகள் செய்கின்ற முக்கிய பணி, இந்த தேசத்தை அரசியல் ஊழல் கொள்ளையர்கள் இடம் இருந்து காப்பாற்றும் பணி.
அது மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் அவ்வப்போது சில சட்டங்களை மக்கள் நலனுக்காக கொண்டு வந்து, ஜனநாயகத்தை பாதுகாத்து வருகிறது. அது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. இன்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்படி ஒரு தேர்தல் அறிக்கை கொடுத்திருப்பது வெட்கக்கேடான ஒன்று. இதற்கு தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கண்டனத்தை தெரிவிக்கிறது.
திமுகவின் மூன்று வருட சாதனை பட்டியல்,
1) மின்சார கட்டண உயர்வு,
2) வீட்டு வரி உயர்வு,
3) தண்ணீர் வரி உயர்வு ,
4) சொத்து வரி உயர்வு ,
5).பத்திர பதிவு கட்டணம் உயர்வு,
6 )சாராய வரி உயர்வு,
7) தொழில் வரி உயர்வு ,
8) போக்குவரத்து அபராத தொகை உயர்வு 100 ரூபாய் இருந்த ஹெல்மெட் அபராதம் ஸ்டாலின் ஆட்சியில் 1000 கந்துவட்டியை மிஞ்சியது
9) அத்தியாவசிய பொருட்களின் விலை வாசி உயர்வு
10) திமுக குடும்பங்களின் சொத்து மதிப்பு உயர்வு
11)போதை பொருள், கஞ்சா விற்பனை உயர்வு
12) ரவுடிகளால் பொது மக்களின் உயிர் பலி உயர்வு
13) நில அபகரிப்பு உயர்வு
14) சாராய விற்பனை உயர்வு
15) லஞ்சம் ஊழல் உயர்வு
16) பஸ் கட்டணம் விலை உயர்வு
17) பால் விலை உயர்வு
18) பருப்பு அரிசி விலை உயர்வு
19) கட்டுமான பொருட்களின் விலை உயர்வு
20) சாலை வரி உயர்வு
21) படித்த இளைஞர்களுக்கு வேலை இழப்பு உயர்வு
22) இளம் விதவைகளின் எண்ணிக்கை உயர்வு
23) சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிடபடும் திரைபடங்களின் எண்ணிக்கை உயர்வு
24) சன் நெட்வொர்க்,கலைஞர் நெட்வொர்க் அனைத்து மொழிகளிலும் சேனலின் எண்ணிக்கை உயர்வு
மேலும், தேர்தல் அறிக்கை மக்கள் நலனுக்காக தான் இருக்க வேண்டுமே ஒழிய நீங்கள் கொள்ளை அடித்து, ஊழல் செய்ய தேர்தல் அறிக்கைகள் தயாரித்து, அதை ஊடகங்கள் மக்களிடம் நல்லது, நியாயமானது என்று சொல்லி செய்திகளை வெளியிடுவதும், அரசியல் தெரியாத மக்களை ஒரு விதத்தில் அதுவும் மக்களை ஏமாற்றும் வேலை. இப்படிப்பட்ட தேர்தல் அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுமக்கள் வாக்களிக்காதீர்கள். இது அரசியலை சுயநலமாக்கிவிடும். இந்த சுயநலவாதிகளின் அரசியல் மக்களை அடிமையாக்கி, மேலும் நாட்டில் ஊழல்வாதிகள் ஆட்சிதான் நடைபெறுமே ஒழிய, மக்களாட்சி நடைபெறாது. அதனால், தற்போதைய ஊழலுக்கு எதிரான ஒரே அரசியல் கட்சி பிஜேபி தான்.
நாட்டில் இது போன்ற அரசியல் கட்சிகள், மக்களை ஏமாற்றி, திசை திருப்பி தவறான கருத்துக்களை அரசியல் தெரியாதவர்களிடம் ஊடகங்கள் இதையும் கொண்டு சேர்க்கிறது . அதனால், இது போன்ற அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்தால், நாட்டில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகும் .மேலும்,ஊழல் செய்ததை நடவடிக்கை எடுக்கக் கூடாது. போதைப்பொருள் கடத்துவதை நடவடிக்கை எடுக்கக் கூடாது .
அப்படி என்றால். மக்கள் இன்னும் வறுமையின் பிடியில் எதிர்கால சந்ததிகள் வறுமை வேலையின்மை வாழ்க்கை போராட்டங்கள் சட்ட போராட்டங்கள் கலாச்சார சீரழிவு போதை பொருள் போன்ற சகலமும் இந்த நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனவே இப்படிப்பட்ட தேர்தல் அறிக்கை வெளியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்காதீர்கள். அது மக்களை முட்டாளாக்கும் தேர்தல் அறிக்கை விழித்துக் கொள்ளுங்கள் வாக்காளர்களே.மேலும்,
இவர்கள் இந்த நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை (கருப்பு பணம்)அந்நிய நாட்டில் முதலீடு செய்வதும் , அதை வெள்ளையாக்கி, இங்கே கொண்டு வருவதும், இது போன்ற பண மோசடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இது மக்களுடைய பணம்.இந்த பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் விலைவாசி உயர்கிறது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்து விடுகிறது. அப்போது இங்குள்ள மக்களுக்கு வேலையின்மை ,பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டால், அடித்தட்டு மக்களுக்கு வறுமை, வாழ்க்கை போராட்டம், சட்ட போராட்டம், சமூக நீதி இவை எல்லாம் கேள்விக்குறியாகி வருகிறது.
அதனால், ஊழல் என்பது ஏதோ அரசாங்கத்தின் பணம் என்று நினைக்காதீர்கள் .அது மக்களின் பணம். மக்களின் வளர்ச்சிக்கான பணம். அதை எம்எல்ஏ, எம்பி ,மந்திரிகள் இவர்களுடைய வளர்ச்சிக்காக எடுத்துக் கொள்கிறார்கள். எந்த மக்களுக்காக? எந்த மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என்று சத்தியம் செய்து வருகிறார்களோ, அந்த சத்தியத்தை மறந்து கொள்ளையர்களாக மாறி விடுகிறார்கள்.
இதை தட்டி கேட்க மக்களால் முடியாது. சட்டத்தின் மூலமும் அமலாக்கத்துறை, சிபிஐ ,வருமானத்துறை மூலமும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது கூட இல்லை என்றால், நாட்டில் உள்ள அனைத்து வளங்களும் ,அரசியல் கட்சி கொள்ளையர்கள் கொள்ளை அடித்து விடுவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.எனவே, மக்கள் புரிந்து வாக்களிக்க வேண்டும்.இது தவிர,
தேர்தல் நேரத்தில் கொள்ளையடித்த பணத்தை மீண்டும் கொள்ளையடிக்க வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து ,ஊழல்வாதிகளும், ஊழல் வழக்கு உள்ளவர்களும், தேர்வு செய்யப்படுவது இன்னும் இந்த தேர்தல் பற்றி புரியாத வாக்காளர்களாக தான் மக்கள் இருக்கிறார்கள்.ஊழல் பணத்தில் மக்களின் அதிகாரத்தை விலைக்கு வாங்குவதும், கடமைக்கு தேர்தல் நடத்துவதும் மக்களை ஏமாற்றும் தேர்தல் . மேலும் மக்கள் ஓட்டுக்கு 5000 வாங்கி வாக்களிப்பது ,உங்கள் தலையில் மேலும் கடனாக்க போகிறார்கள்.
இதையே தான் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பல ஆயிரம் கோடிகள் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார்கள். நரேந்திர மோடி வட்டியும், கடனையும் அடைத்துள்ளார் .இல்லை என்றால், நாடு திவாலாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இந்த ஊடகங்களில் வருகின்ற இது போன்ற சுயநல அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், பொய் பிரச்சாரங்கள் நாட்டில் சுயநல அரசியலை ஏற்படுத்துமே ஒழிய, பொதுநல அரசியலை உருவாக்காது. இதை நம்பி வாக்களித்தால் மக்கள் அரசியலில் ஏமாற்றப்படுவார்கள். அதனால் பொது நலத்துடன் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்து, இந்த நாட்டை அரசியல் கட்சி கொள்ளையர்கள் இடம் இருந்து பாதுகாப்போம். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், சிந்தித்து வாக்களிப்போம் -சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .