
இந்துக்களின் உணர்வுகளை மற்றும் மதத்தினர் புண்படுத்தக் கூடாது. அது அரசியல் என்று திமுக ,தி.க.போன்ற கட்சியினர் தொடர்ந்து செய்து வந்த அரசியல்.
அப்போது மக்கள் இதைப் பற்றி அந்த அளவுக்கு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை அப்படியே தொடர்ந்து ,இப்படிப்பட்ட அரசியல் செய்து இந்துக்களுக்கு எதிராக இருப்பது போல், கிறிஸ்தவ மக்களையும் ,முஸ்லிம் மக்களையும் ஏமாற்றி வந்த அரசியல் தான் இது.

ஓட்டுக்காக பிறந்த ஒரு மதத்தையே இழிவாக பேசும் ஒரு கூட்டம், மத நல்லிணக்கத்தை பற்றி மைக்கில் பேசிவிட்டு போவது யாரை ஏமாற்றும் வேலை ? இப்படிதான் இவர்களுடைய அரசியல் லட்சணம்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்த அரசியலுக்கு பக்கபலமாக பல ஐ .டி .விங் கூட்டங்கள் ஏதோ அவர்களுக்கு எப்படி எல்லாம் தோன்றுகிறதோ ,அப்படி எல்லாம் சித்தரித்து இந்த தெய்வங்களை சோசியல் மீடியாக்களில் பரவ விட்டார்கள்.

அதன் எதிரொலி உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு எச்சரிக்கை விடுத்து தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது இந்துக்களுக்கு எதிரான மத துவேஷங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி தான் வைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.