தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கும் அரசியல் கட்சியினருக்கும் பஞ்சமில்லை ஆனால் அதற்கு அர்த்தமும் தகுதி இல்லாதவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள் அது மட்டுமல்ல இன்றைய அரசியல் கட்சிகளில் கிரிமினல்கள் மோசடி பேர்வழிகள் ஏமாற்று பேர்வழிகள் ஊர் சொத்துக்களை பங்கு போடுபவர்கள், உழைக்காமல் ஊரை ஏமாற்றுபவர்கள் ரவுடிகள், சுயநலவாதிகள்,இவர்களின் புகலிடமாக இன்றைய அரசியல் கட்சிகள் உள்ளது.
மேலும், நாட்டில் அரசியல் கட்சிகளின் அடிப்படை நோக்கமே தவறாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் இருக்க வேண்டுமோ, அது இல்லாமல், இவர்களே வன்முறையாளர்களாக இருப்பது, எப்படி இவர்களால் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும்? இது அரசியல் தெரிந்த மக்களின் கருத்து. இது தவிர சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நாட்டில் சட்ட சிக்கல், குழப்பங்கள் ஏற்படுத்துவது, பிரச்சனைகளை உருவாக்குவது, இவையெல்லாம் மக்கள் நலனுக்காகவா? அல்லது இவர்கள் சொந்த நலனுக்காகவா? இன்றைய அரசியல் கட்சித் தலைவர்கள், மக்களை கவர்ந்து அவர்களின் வாக்குகளை பெறுவது மட்டுமே முக்கிய நோக்கம். தவிர,நாம் தமிழர் கட்சி சீமான்
வட இந்திய தொழிலாளர்களின் வருகை பற்றி பேசும்போது, அதில் நல்லதும் இருக்கிறது .கெட்டதும் இருக்கிறது .அவர்கள் இங்கே வந்துவிட்டால் அதிக அளவில் இந்த மண் அவர்களுக்கு சொந்தம் ஆகிவிடும். அது யோசிக்க வேண்டிய விஷயம் தான், அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இங்கு இருப்பவர்கள் வேலை செய்வதில்லை. டாஸ்மாக் மட்டுமே இருந்தால் போதும், இப்படிப்பட்ட நிலையில் உழைப்பதற்கு தயாராக இல்லை.அதனால்,
இன்று கம்பெனிகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. செய்தவர்களே மறுபடியும் ஷிப்ட் பார்க்க வேண்டிய பார்க்க வேண்டிய நிலைமைக்கு கம்பெனிகள் இருந்து வருகிறது. தொழில் முடங்கினால் அரசுக்கும் நாட்டுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். இதைப் பற்றி ஒருவரும் பேசுவதில்லை. ஆனால் வட இந்தியர்கள் இங்கு வந்தால் அவர்களுடைய வாக்கு இங்கு அதிகரித்து விடும் .இதைப்பற்றி தான் பேசுகிறார்கள். இன்று பல லட்சம் வட இந்திய தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள்.
இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு காரணமே தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். இங்கு உள்ள கட்சிகள் லட்சக்கணக்கில் மக்களை பங்கு போட்டு, இன்று ஓட்டு அரசியலை தான் தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டு அரசியலுக்காக பணம் பண்ணும் வேலை, ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி, லெட்டர் பேடு அரசியல் கட்சிகள்,எல்லாம் சேர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் .
தவிர , மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளும் இல்லை. இந்த அரசியல் கட்சிகளும் இல்லை. ஆட்சி அதிகாரம் கைப்பற்றினால் நாம் எல்லாம் சரி செய்து விடலாம். அது தேவைதான். ஆனால் அதற்கு உழைப்பு இருக்க வேண்டும் அல்லவா, உழைக்காமல் அரசியலில் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள். இன்றைய அரசியல் கட்சிகள், உழைக்காமல் பணம் பண்ணும் வேலையை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எல்லாரும் அந்த நிலைக்கு வந்து விட்டால், இன்று தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிலால், சாதாரண பொதுமக்கள், தொழிற்சாலைகள், வியாபாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், இவர்களெல்லாம் பொதுநலத்திற்கும், பொது சொத்துக்களுக்கும் போராடும் போது, இந்த அரசியல் கட்சி மற்றும் கட்சிக்காரர்களால் ஒரு பக்கம் வன்முறை ,ஒரு பக்கம் வழக்குகள், போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் அரசாங்கத்தின் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். அவர்கள் நியாயத்திற்காக போராடுகிறார்கள். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இன்று இரண்டு சதவீதம் கூட நியாயத்திற்காக நிற்ப்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. அந்த அளவிற்கு இவர்களுடைய சுயநலமும் அரசு அதிகாரிகளின் சுயநலமும் ஒன்று கலந்து விட்டது. இதனால் இன்று தமிழகம் முழுதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஆகவே, அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காக இருப்பதை விட, அரசியல் லாபங்களுக்காகவும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு என்ன வேலையோ அதை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே, தவிர ,மக்கள் பிரச்சனை, மக்கள் நலன், பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. கட்சி என்பது அவர்களுடைய வருமானத்திற்கு வேலை பார்க்கும் ஒரு தளமாக ஆகிவிட்டார்கள். இதற்கு காரணம் மக்களுக்கு அரசியல் தெரியாது .கட்சி என்றால் அதற்கு அர்த்தம் தெரியாது .
அர்த்தம் தெரியாதவர்களிடம் தான் இன்று பொறுப்புகளை கொடுத்திருக்கிறார்கள். அர்த்தம் தெரியாதவர்களிடம் தான் இன்று எம்எல்ஏ, மந்திரி, பதவிகளை கொடுத்து இருக்கிறார்கள். அதனுடைய பலன் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,மக்கள் அதிகாரிகளிடம் கொடுக்கின்ற புகார் மனுவுக்கு கூட மதிப்பு இல்லை. பத்திரிகைகளில் எழுதக்கூடிய உண்மை நிகழ்வுகளுக்கு கூட ,அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள்.
நாட்டில் வன்முறைக்கு தான் முக்கியத்துவம் என்ற நிலைமை வந்துள்ளது. இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கு ஆபத்தானது. எந்த நோக்கத்திற்காக அரசியல் கட்சி இருக்க வேண்டுமோ அது இல்லாமல், அவர்களை வன்முறையாளர்களாக இருந்தால், அதை எப்படி கட்சி என்று சொல்வது? மேலும், இன்று கட்சியில் சேர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது, சட்டத்தை அதற்கு ஏற்றார் போல் வளைத்துக் கொள்வது அரசியல் கட்சி அடியாட்களா? இல்லை இவர்கள் அரசியல் வியாபாரிகளா? இல்லை அரசியலில் பிழைப்பு நடத்துபவர்களா? அல்லது தெரியாத மக்களிடம் காசு கொடுத்து வாக்குகளை வாங்கும் புரோக்கர்களா? இப்படி இருந்தால் இவர்கள் எப்படி சமூகப் பணியாற்றுவார்கள்? இவர்களுக்கும், அதற்கும் சம்பந்தம் இருக்கிறதா?
எம்ஜிஆர் பாடிய பாடல் வரிகளில், எத்தனை காலம்தான் இன்னும், இந்த நாட்டை ஏமாற்றுவார்கள்? எப்போது இந்த வாக்காளர்களுக்கு உன்னை தெரிய போகிறது? வருங்கால இளைய தலைமுறைகள் ஆவது விழித்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளால் உங்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர்களே அரசியல் கட்சிக்கு தகுதியானவர்கள் என்பதை புரிந்து, நல்லாட்சிக்கு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அது தான் நாட்டிற்கும், மக்களுக்கும் தேவையான ஒரு அரசியல் .அப்பொழுதுதான் நேர்மையான அரசியல், மக்களுக்கான அரசியல் கொண்டுவர முடியும்.
அது மட்டுமல்ல, இந்த அரசியல் கட்சிகளிடம் மக்கள் இலவசமும், பணமும் பெற்று வாக்களிப்பது ஒரு தவறான கலாச்சாரம். மக்கள் சுயநலமாக இருந்தால் உங்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள். மக்களுக்கு சுயநலமும் தெரியவில்லை. பொதுநலமும் தெரியவில்லை. மேலும்அரசியல் கட்சி குடிகாரர்கள் அதிகமாகி ஆதிக்கம் செலுத்தும் நிலை தமிழ்நாட்டில் வந்துவிட்டது. இதில் குடி காரர்கள் போதைக்கு அடிமையானவர்கள். இவர்கள் எல்லாம் வந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்து விடப் போகிறார்கள் ?அவர்கள் வீட்டுக்கு எத்தனை கோடி எடுத்துக்கொண்டு போகலாம்? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு ஒரு கட்சியின் பேனர் தேவை.இவர்களை புகழ்வதற்கு பத்திரிகைகள் தேவை.மேலும் அந்த பத்திரிகைகள்,நடுநிலையாக இல்லாமல் ஒரு சில அரசியல் கட்சிக்கு சாதகமாகவும் ,ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாகவும், அரசியல் தெரியாத மக்களிடம், சலுகை விளம்பரங்களுக்காக அரசியல் வியாபாரம், பத்திரிகை வியாபாரம் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது.
இவை தவறுகளை கூட சுட்டி காட்டாமல், மக்களுக்கு எந்த உண்மையும் வெளிப்படுத்தாமல், காசு மட்டுமே குறிக்கோளாக, அதாவது இப்படிப்பட்ட அரசியலைக் கூட பாராட்டி, புகழ்வது ஒரு கேவலமான நிலைக்கு பெரிய பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
மேலும், மக்கள் உண்மை, நேர்மை மறந்து வாழ்ந்தால், சத்தியம் தர்மத்தை மறந்து வாழ்ந்தால், மனசாட்சிக்கு விரோதமாக வாழ்ந்தால், இது போன்ற தவறான கருத்துகள், மற்றும் தவறானவர்களால் அரசியல் ஆதிக்கம் செலுத்தி, அவர்களின் அடிமைகளாக, மக்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டு புலம்பும் நிலையா? இன்றைய அரசியல். மற்றும் மக்களின் நிலை.