மத்திய அரசு நாட்டில் பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து செயல்படுத்தினாலும், இன்னும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் முக்கிய அதிகாரிகள்! இவர்கள்தான் திருடனுக்கு வீட்டைத் திறந்து விடுவதிலும், சாவி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும், இருக்கிறார்கள்.
அதில் அவர்களுக்கும் லாபம் இருக்கத்தான் செய்கிறது. லாபம் இல்லாமல் அவர்களும் அதை செய்யவில்லை .ஏனென்றால், இவர்கள் அதிக அளவில் கணக்கு காட்ட முடியாது. அரசியல்வாதிகளால் கணக்கு காட்ட முடியும். தற்போது அந்த கணக்கும் ஒரு எல்லைக்குள் தான் காட்ட முடியும் என்ற வரையறையை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். மேலும்,
கிராமங்களில் அதிகம் படித்தவர்கள் இல்லை .அங்கு தான் அதிக ஊழல் நடைபெற முக்கிய காரணமாக இவர்கள் இருந்து வருகிறார்கள். தவிர, கிராமங்களில் தற்போது குடிகாரர்கள் அதிகமாகி விட்டார்கள்.
அவர்களுக்கு குடிப்பதற்கு பணம் கொடுத்தால் போதும், அதற்காக ஒரு கூட்டமாக இருந்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் ஆதரவாக பேசிக்கொண்டு இருப்பார்கள். அதனால் ஊரில் அவர்கள் வைத்தது சட்டம் ஆகிவிடும்.
படித்தவர்கள், விஷயம் தெரிந்தவர்கள் அதை பற்றி அதிகாரிகளிடம் முறையிடுவார்கள். ஆனால், அதிகாரிகளும் அலட்சியமாக இருப்பார்கள். அந்த அலட்சியத்தை சமூக ஆர்வலர்களும், சமூக பத்திரிகையாளர்களும் இந்த ஊழலுக்கு முக்கிய அதிகாரிகள் மீது புகார் கொடுப்பதும், ஆர் டி ஐ மூலம் கேள்வி கேட்பதும், வழக்குகள் தொடர்வதும் தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதை மத்திய அரசு நினைத்தால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவர்கள் செய்ய வேண்டிய வேலையை சமூக ஆர்வலர்களும், சமூக பத்திரிகையாளர்களும், சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு மேற்படி துறைகளின் அதிகாரிகள் இருந்து வருகிறார்கள். அதனால், எந்தெந்த மாவட்டத்தில் இது போன்ற ஊழலுக்கு காரணமாக செயல்படும் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் அந்த மாவட்ட ஆட்சியர்கள் வரை அதற்கு பொறுப்பு ஏற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடும் சட்டம் கொண்டு வர வேண்டும். இது போன்ற சட்டங்கள் கொண்டு வந்தால் நிச்சயம் இதை தடுக்க முடியும். ஊழலில் 90% மேற்படி இந்த துறைகளில் உள்ளது.
அதாவது பொதுப்பணித்துறை, வனத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை போன்றவற்றில் கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளின் வியாபாரம் ஆகிவிட்டது. இந்த வியாபாரத்திற்கு உதவியாளர்களாக தான் இந்த துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் இருந்து வருகிறார்கள். அதாவது, கனிம வளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பத்தாயிரம் லோடு ஓட்ட அனுமதி வாங்கிக் கொண்டு, ஒரு ஏரியே காலி பண்ணி விடுவார்கள்.
அதேபோல் ஆற்றில் ஒரு குறிப்பிட்ட சதுர மீட்டருக்கு அனுமதி வாங்கிவிட்டு, ஆற்றையே தரைமட்டம் வரை காலி பண்ணி விடுவார்கள்.
மேலும், வனத்துறையில் கோடிக்கு மேல் போக வேண்டிய மரங்களை கூட, ஒன்றரை லட்சத்திற்கு மதிப்பீடு செய்வார்கள். அந்த மதிப்பீட்டை வைத்து பொதுப்பணித்துறை ஏரிகளில் உள்ள மரங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏலம் விட்டு விடுவார்கள். இந்த சம்பவம் தற்போது திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில் நடந்துள்ளது.
இது பற்றி காவல்துறை நண்பர் ஒருவருக்கும் தெரிந்து என்னிடம் பேசினார் அப்படி என்றால், இது உளவுத்துறைக்கும் தெரிந்துள்ளது. அதாவது ஒன்ற லட்சத்திற்கு ஏலம் விட்டது, அந்த கிராமத்தில் மறு ஏலமாக 57 லட்சத்திற்கு விடப்பட்டுள்ளது. இப்படி சட்டம் என்பது எந்த அளவிற்கு படிக்காத மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருப்பதற்கு இதுவே ஒரு மிகப்பெரிய உதாரணம். அதனால் தான்.
இது போன்ற கொள்ளைகள் நடைபெறும் போது, அந்த கிராமங்களில் சமூக நன்மைக்காக போராட சமூக ஆர்வளர்களும், சமூக பத்திரிகையாளர்களும் போராடிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வார்கள் .இதுதான் இவர்கள் சட்டத்தை பாதுகாக்கும் லட்சணம். அதனால் இவை எல்லாம் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படி நடக்கின்ற சம்பவங்கள் மீது நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மேலும்,
இதை ஒழிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாவட்டத்தில் அவர்கள் மீது கடும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதுமட்டுமல்ல இவர்கள் அரசியல்வாதிகளுக்கு கொள்ளை அடிக்க அல்லது தானும் அதில் பங்கு பெற்றுக் கொள்ள இருந்து வரும் மறைமுக சதி திட்ட வேலைகளில் முக்கிய பங்கு உண்டு . இங்கிருந்து தான் ஊழல் ஆரம்பிக்கிறது.
அது மட்டுமல்ல இங்கிருந்துதான் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து எல்லாவற்றிற்கும் அடித்தளமாக இந்த இயற்கை வளங்கள், கனிம வளங்கள் ,பொது சொத்து ஆக்கிரமிப்புகள், போன்றவற்றின் பணம் தான் இன்று அரசியலில் அடியாட்களை கோடிக்கணக்கில் உருவாக்கி வைத்திருக்கிறது. அது மட்டுமல்ல இன்று நாட்டில் ஆயிரக்கணக்கில் அரசியல் கட்சிகளை இயக்கிக் கொண்டிருப்பதும் அதுதான் . அதனால்,
இதற்கு மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் அது மட்டும் அல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த நஷ்டத்திற்கு பொறுப்பேற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.மேலும்,
இதற்கான ஒரு தனி நீதிமன்றம் இருக்க வேண்டும் அது மற்ற நீதிமன்றம் போல் வயதா வாங்கிக் கொண்டிருக்க இல்லாமல் சமூக பாதுகாப்பு நீதிமன்றமாக இருக்க வேண்டும் . இப்படி கொண்டு வந்து பாருங்கள் நாட்டில் ஊழலை ஏன் ஒழிக்க முடியாது? இது பிரதமர் மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் வைக்கின்ற முக்கிய கோரிக்கை.