சமூக வலைதளத்தில் வெளியான கருத்து.
மத சுதந்திரத்தின் அடிப்படை எல்லா மதத்திற்கும் எல்லோருக்கும் பொதுவானது. இதில் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் மதத்தின் அடிப்படையில் பேசிய கருத்துக்கு கூட அவரை காவல்துறையில் சஸ்பெண்ட் செய்வதா? மேலும், அவர் இந்து மதம் என்பதால் அவருக்கு அந்த உரிமை இல்லையா? ஒருவர் காவல்துறையில் பணியாற்றுகிறார் என்பதற்காக திமுக அரசு அவரை அடிமை என்று நினைத்து விடக்கூடாது. அவருக்கும் இந்த நாட்டில், அவர் எந்த மதத்தை சார்ந்து இருக்கிறாரோ, அந்த மதத்தின் அடிப்படையில் அவருக்கு பேச உரிமை உண்டு.
மேலும், டிராபிக் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் எந்த மதத்தையும் இழிவாக, தவறாக பேசவில்லை. அவர் சொன்ன ஒரு கருத்து நாங்கள் எண்பது சதவீதம் இருக்கிறோம், நீங்கள் 20% இருக்கிறீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், எந்த நாட்டில் உங்களுக்கு பிடித்த கருத்துக்கள் இருக்கிறதோ, அங்கு நீங்க செல்லலாம் என்ற ஒரு பொதுவான கருத்தை தான் சொல்லியிருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?
திமுக அரசு எத்தனையோ விஷயங்களில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லும்போது, அதையெல்லாம் கேட்டு ரசிக்கிறது. ஆனால், ஒருவர் இந்த மதத்தின் பால் வைத்த நம்பிக்கையை எப்படி தவறு என்கிறீர்கள்? மேலும், காவல்துறையில் கிறிஸ்து மதத்திற்கும், முஸ்லிம் மதத்திற்கும் பேசுவதற்கு உரிமை உண்டு.
ஆனால், இந்து மதத்திற்கு அந்த உரிமை இல்லையா? இது தவறு. தவறான நடவடிக்கை என்பது இந்து மக்கள் அனைவரும், இதற்கு எதிர்ப்பு தான் தெரிவிப்பார்கள். அதனால், திமுக அரசு இரண்டு பேருடைய தனிப்பட்ட கருத்துக்கு, ஒருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்து இந்து மதத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தினால், நிச்சயம் அதற்கான பின் விளைவை திமுக அரசு சந்தித்தே தீரும். மேலும், இப்ப பிரச்சனையில் திமுக அரசு மத அரசியல் செய்கிறதா?