பட்டுக்கோட்டை நகராட்சி இருட்டில் மூழ்கி இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர ,குற்றவியல் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், இரவு நேர பிட் பாக்கட்கள், இவர்களுக்கு இந்த இருட்டு சாதகமாக இருக்கிறது.
மேலும் ,பட்டுக்கோட்டை நகரின் காட்டாற்று பாலம் புறவழிச் சாலை, தஞ்சாவூர் சாலை மணி குண்டு முதல் பேருந்து நிலையம் வரை எல்லா இடங்களிலும் தெருவிளக்குகள் எரிவதே இல்லை.
தவிர, கடைகளில் போடப்பட்டுள்ள விளக்குகள் தான் நகருக்கு வெளிச்சம் தருகின்றன. மக்களின் வரிப்பணம் மூலம் அடிப்படை வசதிகளை கூட நகராட்சி செய்து கொடுப்பதில்லை .
மேலும், பட்டுக்கோட்டை நகராட்சியின் சேர்மன் செந்தில்குமார் மற்றும் ஆணையர் இது பற்றி உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க நகராட்சி பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் – முருகானந்தம்