இடைத் தேர்தல் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் வெற்றி என்பது தற்போது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு அரசியல் களமாக ஈரோடு இடைத்தேர்தல் இருந்து வருகிறது.மேலும்,திமுக நிற்கவில்லை என்றாலும், தன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார். அங்கே திமுக அரசியல் களத்தை முழுமையாக ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.இங்கே கூட்டணியின் பலத்தை திமுக நிருபித்து விட்டது.
ஆனால், அதிமுக எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து வேலை செய்கிறது. இந்த அணிகளில்
எடப்பாடி அணி ,ஓபிஎஸ் அணி, திமுககூட்டணி, மக்கள் ஆதரவு யார் பக்கம் ? மேலும், இருவருக்கும் கட்சி சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி வேற எழுந்துள்ளது? அந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் முடிவு. தவிர,
இரட்டை இலை சின்னம் இல்லாமல் அதிமுகவிற்கு அது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக தான் இருக்கும்.இதற்கு அடுத்தது பிஜேபி எடப்பாடி பக்கம் இருக்குமா? அல்லது ஓபிஎஸ் பக்கம் இருக்குமா? இந்த இரண்டு அணிகளில் யார் பக்கம்? என்று இன்னும் அது முடிவாகத நிலையில் பிஜேபி இருந்து வருகிறது.மேலும்,
இப்படிப்பட்ட சூழ்நிலையில், திமுக பலமாக தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் களத்தை சந்திக்கின்றன. அங்கே கூட்டணியும் வலுவாக இல்லை. மற்றொரு பக்கம் திமுக பணத்தை வாரி இறைக்கிறது. இதில் கைதேர்ந்த அமைச்சர்களான கரூர் மந்திரி செந்தில் பாலாஜி ,கே என் நேரு , மற்றும் பல மாவட்ட அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை வட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.மேலும்,
ஏற்கனவே, ஒரு பார்ட் டிஸ்போசல் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்துவிட்டதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் மக்களுக்கு ஆட்சியின் மீது அதிருப்தி இருந்தாலும், பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்க முடிவு செய்வார்கள். இது தொடர்ந்து இந்த வாக்கு வங்கி வியாபாரம் தான் அதிமுக ,திமுக அரசியல் கட்சிகள் செய்து வருகிறது.
இதை தேர்தல் ஆணையம், இது பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வருவதில்லை. கடமைக்கு தேர்தல் நடத்துகிறது. அதனால், இந்த தேர்தல் என்பது ஒரு கடமைக்கு தான் தேர்தல் .நாட்டின் சமூக நன்மைக்காக தேர்தல் இருந்தால் தான், இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும், தேர்தல் ஆணையம் இன்னும் அதற்கான எந்த ஒரு தெளிவான முடிவும் எடுக்கவில்லை .
அரசியல் கட்சி என்றால் பணத்தை செலவு பண்ணலாம். அரசியல் கட்சி என்றால் குற்றவாளிகள் கூட தேர்தலில் நிற்கலாம். அரசியல் கட்சி என்றால் எந்த ஒரு மோசடி குற்றவாளியும் தேர்தலில் நின்று ஜெயிக்கலாம். ஊழல்வாதிகள் தேர்தலில் நின்று ஜெயிக்கலாம். எப்படி ஜெயிப்பார்கள்? எல்லாம் பணம். ஆகக்கூடிய பணத்தால் இன்றைய தேர்தல் நிர்ணயிக்கும் நிலைக்கு வந்த பிறகு, அங்கே தகுதிக்கு என்ன வேலை இருக்கு? இதை எப்போது தமிழக மக்கள் உணர்ந்து தகுதிக்கு வாக்களிக்கிறார்களோ, அப்போதுதான் நாட்டில் ஊழல் அற்ற ஆட்சி, மக்களுக்கான ஆட்சி ,அமையும் என்பது உறுதி.