ஒரு வேட்பாளர் தேர்தலில் நிற்க ஏன் பொருளும், பணமும் கொடுக்க வேண்டும்? அதை கொடுக்காமல் அவரால் ஜெயிக்க முடியாதா? அப்படி கொடுத்து ஜெயிப்பது என்ன காரணத்துக்காக……. ? மேலும், தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சிகள் என்று சொல்லக்கூடிய அதிமுகவும், திமுகவும் பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியாதா?
அப்படி பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியவில்லை என்றால், எதற்கு பெரிய கட்சி என்று சொல்லிக் கொள்கிறீர்கள்? பணம் கொடுத்து ஜெயிப்பது பெரிய கட்சி அல்ல. யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ ,அவர்கள் பெரிய கட்சியும் அல்ல. மக்களுக்கு யார் பெரிய சேவை செய்கிறார்களோ, அவர்கள்தான் பெரிய அரசியல் கட்சிகள்.
அதனால், இந்த இரண்டு பெரிய கட்சிகளும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தண்ணி குடித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு டப் (Tough) கொடுத்திருக்கிறது, ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல். இவர்கள் ஒரு பக்கம் பணம் ,இன்னொரு பக்கம் பொருள் என்று இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு வாக்காளர்களுக்கு கொடுத்து வருகிறது.
இதில் திமுக ஒரு பக்கம், ஈரோடு கிழக்கு பரிசு பொருட்கள் விபரம்…
1) வெள்ளி
கொலுசு 2) வெள்ளி டம்ளர் 3) எவர்சில்வர் தட்டு 4) எவர்சில்வர் குடம் 5) மில்டன் ஹாட் பாக்ஸ் 6) ஸ்மார்ட் வாட்ச் 7) பிரிஸ்டீஜ் பிரஸர் குக்கர் 8) அரிசி ஒரு சிப்பம் 9) காமாட்சி விளக்கு 10) ராம்ராஜ் வேட்டி 11) ராம்ராஜ் லினன் சட்டை12) ரூபாய் 900 மதிப்புள்ள புடவை 13) ஒரு ஓட்டுக்கு ரூபாய் 3000/- 14) தினசரி மட்டன் சிக்கன் பிரியாணி 15) தினசரி ரூபாய் 1000/- மற்றும் மது 16) மூன்று வாரம் ஞாயிறு தோறும் 1.5 kg
சிக்கன் மற்றும் 1 kg மட்டன் 17) ரூபாய் 1000 மதிப்புள்ள
சென்ன சில்க்ஸ் கிஃப்ட் கூப்பன்
18) ரூபாய் 2000 மதிப்புள்ள மளிகை கூப்பன்
அதிமுக ஒரு பக்கம்
இதில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது, பொருள் கொடுக்க கூடாது, என்பது தேர்தல் விதி.
அந்த விதிகளை விதி இரண்டு பெரிய கட்சிகளும் அதை ஏற்று செயல்படவில்லை என்றால், இது சட்டத்திற்கு புறம்பான ஒரு தேர்தல் விதிமுறை தானே!
இந்த விதிமுறையை கடைபிடித்து வெற்றி பெற்றால், இந்திய தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது அதற்கு தகுதி நீக்கம் செய்யலாமா? அல்லது தேர்தலை தள்ளி வைக்கலாமா?
இப்படிப்பட்ட சூழ்நிலை தான் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல் இருந்து வருகிறது .இது பற்றி உளவுத்துறை ரிப்போர்ட் பத்திரிகை செய்திகள் போன்றவற்றை ஆய்வு செய்து இந்திய தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி?
இப்படி குறுக்கு வழியில் பணமும் பொருளும் கொடுத்து வாக்காளர்களை ஏமாற்றி ஜெயித்தால் இவர்களால் சரியான நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க முடிகிறதா…?