
ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?
பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா?

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் தலைமையில் இரண்டு நீதிபதிகள் அமர்வு தங்களுடைய அதிகாரம் சட்டப் பிரிவு 142 பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து இந்தியா முழுவதும் மக்களிடையே அது அதிர்வாளிகளை ஏற்படுத்தியது. அது பற்றி ஜனாதிபதி மோர் மூர்மூ உச்ச நீதிமன்றத்திற்கு சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அதற்கு அவர்கள் பதில் அளிக்க முடியுமா? அது என்ன என்றால்?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அவருக்கு எதிராக தமிழக அரசு கொடுத்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 142 இல் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.

அடுத்தது, அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசு தலைவர் மற்றும் ஆளுநரின் உத்தரவுகளை பிரிவு 142 இன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா? அடுத்தது
பிரிவு 131 கீழ் வழக்கு தொடர்வதை தவிர மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களை தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறதா?

மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?
மேலும், பிரிவு 145 (3) இன் படி எந்த ஒரு உச்சநீதிமன்ற அமர்வும், விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதாக என்பதை முதலில் முடிவு செய்து குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயம் இல்லையா?

மேலும் ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது பிரிவு 143 இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவும் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெறவும் குடியரசு தலைவர் கடமைப்பட்டுள்ளார?
அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலகடு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களை பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில் சட்ட பிரிவு 200ின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநரால் பயன்படுத்துவதற்காக நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு விதிக்கப்பட்டு செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா?

மேலும், ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும் போது அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும் போது அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
இப்படிப்பட்ட சட்டத்தின் நடைமுறைகள் எல்லாம் இருக்கும்போது உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டது என்று திமுக கட்சியினர் புலகாகிதமடைந்து, ஆளுநரை எவ்வளவு வசை பாடினார்கள். ஆளுநர் என்னவோ எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு பொறுமையாக சகித்துக் கொண்டுதான் இருந்தார்.

அரசியல் கட்சி என்றால் மக்கள் நலனில் அக்கறை இருக்க வேண்டுமே தவிர, உங்கள் நலனில் அக்கறை காட்டக் கூடாது. இனிமேலாவது திமுக அரசுக்கு இந்த சட்ட வரைமுறைகள் புரியுமா? மேலும், ஆளுநர் விஷயத்தில் அரசியல் கட்சியினரைப் போல், பல பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் புகழ்ந்து, பாராட்டி செய்திகளை வெளியிட்டார்கள். இப்போது அவர்கள் எல்லாம் எந்த பக்கம் முகத்தை வைத்துக் கொள்வார்களோ தெரியவில்லை..
மேலும் அப்போதும் நடுநிலையாகத்தான் மக்கள் அதிகாரம் செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்த உண்மையை அப்போதே புரிய வைத்தோம். அது மட்டுமல்ல,இவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் இனி ஆளுநருக்கு அனுப்பாமல், உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி கொள்வார்களா? சட்டம் வேண்டுமென்றால் கொண்டாடுவார்கள்.வேண்டாம் என்றால் அதை தூக்கிப் போட்டு மிதித்து கொண்டிருப்பார்கள்.
இதுதான் அரசியலா?அல்லது அரசியல் கட்சியா? மேலும், பத்திரிக்கை என்பது சட்டத்தை மதித்து மக்கள் நலனுக்காக செய்திகள் இருக்க வேண்டுமே ஒழிய,ஆளும் கட்சி, அரசியல் கட்சி,எதிர்க்கட்சி,என்று அவர்களுக்காக பத்திரிக்கை நடத்தினால்,அது பத்திரிகை அல்ல. அது எடுப்பு வேலை.இப்பதாவது பத்திரிக்கை துறைக்கு இந்த உண்மை புரியுமா?