உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி வியாபாரத்தின் முக்கிய நோக்கமா?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இன்று உலக நாடுகளில் ரஷ்யா ,அமெரிக்கா, ஜப்பான், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி, நாட்டில் உள்ள கனிம வளங்கள், விண்வெளியில் உள்ள கனிம வளங்கள், மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புறம் இருந்தாலும், மற்றொருபுறம் அந்த கனிம வளத்தை கொண்டு மற்ற நாடுகளுக்கு கனிம வளத்தை வியாபாரம் செய்வதன் மூலம் பெரும் லாபத்தை அடையலாம்.

 இந்த போட்டியில் தான், தற்போது உலக நாடுகள் இறங்கி இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள். அதற்காக பல ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து வருகின்றன. சந்திராயன் -3 விண்கலம் நிலவில் என்ன ஆராய்ச்சி செய்து வருகிறது? அங்குள்ள தாதுக்கள், மக்களின் பயன்பாட்டுக்கு உகந்ததா ?அப்படியே உகந்ததாக இருந்தாலும், அதைக் கொண்டு வருவதில் எவ்வளவு கடினம்? எவ்வளவு செலவு?

 இது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தொடர்ந்து இந்த விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதற்கான ஒரு இடத்தை தங்கள் நாடு பிடித்துள்ளது, என்பதை உலக வரலாற்றில் இடம் பெற வேண்டும். மேலும், அதுதான் இப்போது மிக முக்கியமாக உள்ளது .சந்தராயன் 3 விண்கலம்  சந்திரனில் தரையிறங்கப்பட்டுள்ளது .அது அங்கிருந்து என்னென்ன இருக்கிறது?  அதனுடைய தட்பவெப்ப நிலை?  புவியியல் அமைப்பு, கனிம வளங்கள் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள்?  இதை எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர் .

இந்த கண்டுபிடிப்புகள் மக்களின் பயன்பாட்டில் கொண்டுவர முடியுமா?  அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒரு கனிமத்தை பூமியிலிருந்து வெட்டி எடுத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு ஏகப்பட்ட செலவினங்கள் உள்ளது. ஆனால், விண்வெளியில் உள்ள கனிமத்தை கொண்டு வருவது அதற்கான செலவினங்கள் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

மேலும், இதைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளின் இந்தப் போட்டி  பிற்காலத்தில் தான் இதை உணரும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். வல்லரசு நாடுகள் மட்டுமே போட்டி போட்ட விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவும், அதில் வெற்றி கண்டது என்பது பெருமைக்குரியது.மேலும், இஸ்ரோவின் முயற்சி சந்த்ராயன் 3 விண்கலம்  வெற்றி பெற்றாலும், அதை உலக நாடுகள் வியந்து திரும்பி பார்க்கும் நிலைக்கு இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு ,திறமை பாராட்டுக்குரியது.

அடுத்து சூரியனை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு இருக்கும் முயற்சி அது அடுத்த கட்டம் தான் .அதாவது சந்திரனைப் போன்று சூரியனில் விண்வெளி களத்தை இறக்க முடியாது. மேலும், சந்திரன் பல லட்சம் மைல்கள் என்று சொன்னால், சூரியன் பல கோடி மைல்கள் தூரம் இவ்வளவு தூரம் பூமிக்கும், சூரியனுக்கும் இருக்கிறது.

 அடுத்தது அதில் எந்த பொருள் போனாலும், அங்கே எறிவது தவிர ,வேறு வழி இல்லை. ஒருவேளை அதன் சுற்றுவட்ட மேற்பரப்புகளை ஆராய்ச்சி செய்யலாம். அதிலிருந்து என்ன தகவல் வரப்போகிறது?  அதன் பயன்கள் மக்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு இருக்கும்? என்பதுதான் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முக்கிய நோக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *