ஊடகங்கள் அதிகரித்து இருந்தாலும் சமூகத்திற்கு அதனால் எத்தனை பத்திரிக்கை தொலைக்காட்சிகள் பயன் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?

அரசியல் இந்தியா உலகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் தற்போது ஒரு மாவட்டத்திற்கு சுமார் 400 பத்திரிகைகள் இருப்பதாக செய்தி தொடர்பு அலுவலர் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார் . இந்த 400 பத்திரிகைகளில் எத்தனை பத்திரிக்கை அச்சிட்டு அல்லது இணையதளத்தில் வெளி வருகிறது ? எத்தனை பத்திரிக்கை செய்திகள் மக்களுக்கான செய்திகள்? உண்மையான செய்திகள்?நடுநிலையான செய்திகள்? தரமான செய்திகள் ?தகுதியான செய்திகள்? எத்தனை பத்திரிகைகளில் வெளி வருகிறது?

தவிர, இன்று whatsapp, facebook, instagram, இதில் எல்லாம் காப்பீ டு பேஸ்ட்  (copy to paste) Forward message ,செய்தி போடுபவர்கள் . நாங்களும் பத்திரிகை என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல,ஒரு செய்தி கூட ஒழுங்காக அனுப்பத் தெரியாதவர்கள், எல்லாம் இன்று நாங்களும் பத்திரிகை, நாங்களும் ரிப்போர்ட்டர் என்று அரசாங்கத்தையும், பொதுமக்களையும், பத்திரிக்கை சமூகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .

RNI வாங்கி எதையாவது காப்பீ டு பேஸ்ட் (copy to paste) போட்டு கணக்கு காட்டும் பத்திரிகைகள் தினசரி முதல் பருவ இழ்கள் வரை சுமார் 90 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது . இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்று மாவட்டம்தோறும் இந்த whatsapp குழுக்களில் போட்டு அதிகாரிகளை பயமுறுத்திக் கொண்டிருப்பதாக தகவல் . அதில் உண்மை இருக்கலாம். அல்லது உள்நோக்கம் இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும்? ஒரு பத்திரிக்கை என்றால், ஒன்று அதனுடைய இணையதளத்தில் செய்திகள் வர வேண்டும். அந்த இணையதளத்தில் எவ்வளவு பார்வையாளர்கள் இருக்கிறார்கள்? என்பது தீர்மானிக்க வேண்டும். அல்லது அதனுடைய அட்சு ஊடகத்தின் சர்குலேஷன் எவ்வளவு? என்பதை தீர்மானிக்க வேண்டும் .இது தினசரி பத்திரிகையாக இருந்தாலும், மாத பத்திரிக்கையாக இருந்தாலும், வார பத்திரிக்கையாக இருந்தாலும், எந்த பத்திரிக்கையாக இருந்தாலும், இதை கருத்தில் கொண்டு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, பத்திரிகைகளை வரைமுறைப்படுத்த சரியான திட்டத்தை வகுக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, சமூக நலன் சார்ந்தது எத்தனை ? அரசியல் கட்சி சார்ந்த  எத்தனை? வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகள் எத்தனை? அது கார்ப்பரேட் நிறுவனமாக இருந்தாலும், சாமானியனின் பத்திரிக்கையாக இருந்தாலும், இந்த விதிகளை கொண்டு மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகாமல், அதன் தரத்தை ஆய்வு செய்து, அதன் பிறகு அதற்கு சலுகைகள் விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் .பழைய சட்டங்கள் பத்திரிக்கை துறையில் காலாவதியான சட்டமாக தான் உள்ளது. காலத்திற்கு ஏற்ப பத்திரிகையின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் .அப்படி மாற்றுவது தான் பத்திரிக்கை துறையை சீரமைக்க உதவும். 

இல்லையென்றால் பத்திரிக்கை துறை வருங்காலத்தில், அதற்கான தகுதி, கௌரவம், மக்களுக்கான பயன்பாடு இல்லாமல், சமூக மாற்றத்திற்கும்,சமூக நன்மைக்கும் உதவாது . 

எனவே இதைக் கருத்தில் கொண்டு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா முக்கிய ஆய்வுக்கு உட்படுத்தி, நடவடிக்கை எடுக்க மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும் முக்கிய கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *