ஊரக வளர்ச்சித் துறையின் பயன்பாட்டிற்காக அலுவலர்களுக்கு புதிய வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், விழாவில் அமைச்சர்கள் கே.என் நேரு, ஐ பெரியசாமி மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, ஊராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.