தேனி மாவட்ட,உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர்,துணைத் தலைவர் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து, ஊராட்சிக்கு கேட்வால்வு,LED விளக்கு,சுகாதார பொருள்கள்,தெருவிளக்கு உபகரணங்கள்,புதிய ஆழ்துளைக் கிணறு, மோட்டார்,குடிநீர் குழாய் பழுது,சாக்கடை, குப்பை சுத்தம் செய்தல்,OHT சுத்தம் செய்தல்,நூறுநாள் வேலை திட்த்தில் என ஊரடசியில் செய்யாத வேலைகளுக்கும்,கொள்முதல் செய்யப்படாத பொருள்களுக்கும், பல வழிகளில் முறைகேடாக கணக்கு எழுதி, (ஊராட்சி மன்றத் தலைவர் ,மகன்கள் பெயரில் மட்டும் பல இலட்சம் கையாடல்) ஊராட்சி நிதியை கையாடல் செய்து ஊராட்சிக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும்,
இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தவைலர் மற்றும் துணைத் தலைவர் இருவரும் ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது சம்பந்தமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பெற்ற தகவலின்படி, அதற்கான ஆதாரங்களுடன் கடந்த செப்டம்பர்- 2022-ல் தேனி மாவட்ட ஆட்சியர் R .V . சஜீவனாவிடம், ஊராட்சிமன்ற உறுப்பினர்களும்,தேவாரம் சர்வதேச உரிமைகள் கழகத்தினரும் புகார் அளித்தார்கள்.
அதன்பிறகு பல நினைவூட்டல் மனுக்கள் அளித்தும் , புகார் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க, காலதாமதப்படுத்துவதை அறிந்த சர்வதேச உரிமைகள் கழகத்தினர், சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை)-ல் இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுநல வழக்கு தொடரப்பட்டு, அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும்,
உயர்நீதிமன்ற உத்தரவின்படி , மாவட்ட ஆட்சியர் சில நடைமுறைகளை பின்பற்றி ,அதன்பின்பு உத்தமபாளையம் வட்டாட்சியரை, இலட்சுமிநாயக்கன்படடி ஊராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்தி, அதன் அறிக்கையை அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவின்படி, கடந்த மார்ச்- 2023-ல் சிறப்பு கூட்டம் நடத்தியதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிதியிழப்பு ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள, அதன் அறிக்கையை ஏப்ரல்-2023-ல் தேனி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.மேலும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்த பிறகும், நீதிமன்ற உத்தரவு வந்த பிறகும், இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் இருவரும் , ஊராட்சியில் எந்த வேலையும் செய்யாமல், பல இலட்சம் ரூபாய் முறைகேடாக கணக்கு எழுதி , ஊராட்சி நிதியில் ஊழல் செய்து வந்துள்ளனர்.
இதற்கு காரணம் தேனி மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்றத் தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காததே மீண்டும், மீண்டும் அதே தவறை செய்து வருகின்றனர். என்கிறார்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தேவாரம் சர்வதேச உரிமைகள் கழகத்தினர். மேலும், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து, வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பு (Notice) அனுப்பப்பட்டது. அதற்கு,தேனி ஊராட்சிகளின் உதவி இயக்குநர் மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கையில் உள்ளதாக வழக்குரைஞருக்கு பதில் தெரிவித்துள்ளார். தவிர,
ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தி ,ஊழல் செய்துள்ள ஊராட்சி மன்றத் தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 பிரிவு-205-ன்படி நடவடிக்கை எடுக்கக்கூடிய (ஊராட்சிகளின் ஆய்வாளர்) மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருந்தால், சுருளிப்பட்டி ஊராட்சி மற்றும் சீப்பாலக்கோட்டை ஊராட்சி உள்பட பல ஊராட்சிகளில் ஊழல் செய்வதற்கோ, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்துவதற்கோ, முற்றுப்பள்ளியாக அமைந்திருக்கும். ஆனால்,
தேனி மாவட்ட ஆட்சியர் கொடுக்கின்ற புகார் மனுக்களை நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி, கிடப்பில் போடுவதால், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை இருந்திருக்காது. மேலும்,
ஊழல்வாதிகள் மீது அரசு அலுவலர்கள், தகுந்த நடடிக்கை எடுப்பதின் மூலமே ஊழலையும்,ஊழல்வாதிகளையும் கட்டுப்படுத்த முடியும். அதில் அக்கறை காட்டாமல் மாவட்ட ஆட்சியர்கள் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர்களாக செயல்பட்டால், எப்படி ஊழலையும், ஊழல்வாதிகளையும் ஒழிக்க முடியும்? என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்.
இனியாவது தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
மாவட்ட செய்தியாளர் முரளிதரன் .