என்னடா இது ! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு வந்த சோதனை ?

அரசியல் ஆன்மீகம் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சமூக வலைத்தளத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பேசுகின்ற பேச்சு .

ஈரோடு பகுதியில் உள்ள சென்னிமல, முருகன் கோயிலுக்கு சொந்தமானது. இதை கிருத்துவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வந்தபோது, இந்து முன்னணியினர் 25,000 மேற்பட்ட மக்கள் அங்கே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வளவு மக்கள் தொகையை குறைந்து மதிப்பிட்டு சொன்ன தினத்தந்தி தொலைக்காட்சியை, இந்து முன்னணி அமைப்பினர் வசைப்பாடி இருக்கிறார்கள். அப்படி ஒரு செய்தியை போடாமலே நீங்கள் இருக்கலாம். ஒருவரை உயர்த்தி, மற்றொருவரை தாழ்த்தி போடும் பத்திரிகை வேலை என்ன வேலை?

 நடுநிலையான பத்திரிகைகள் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள் .இதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து, செய்தித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறது. நாட்டில் தகுதியான பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் குறைந்து விட்டார்கள். பத்திரிக்கை தகுதியும், தரமும் குறைந்து விட்டு, குப்பை, கூளங்கள் போல் பத்திரிகைகள் தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதையெல்லாம் எங்களைப் போன்ற சமூக நல பத்திரிகையாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை .

மேலும், நாட்டில் எந்த பத்திரிகை ,பெரிய பத்திரிக்கை என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பத்திரிக்கை செய்தி பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் ? என்பதுதான் இச்செய்தி

தவிர,.இந்த பத்திரிகைகள் எங்களைப் போன்ற சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகளை அலட்சியமாக பார்க்கும். அதிகாரிகளும் அலட்சியமாக பார்ப்பார்கள். சில அரசியல் கட்சிகளும் அலட்சியமாக பார்ப்பார்கள். ஆனால் மக்களுக்கு இப்போதுதான் இதனுடைய உண்மையான முகங்கள் என்ன ?  என்பதை விவரமானவர்கள் புரிந்து இருக்கிறார்கள். அதனால், மக்கள் பத்திரிகை துறை மீது நம்பிக்கை வைத்து பணிபுரிய ,எங்களைப் போன்ற தகுதியான ,நடுநிலையான பத்திரிகைகளுக்கு அரசாங்கமும், மக்களும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இந்த பிரச்சனையில் மத கலவரம் உருவாகும் சூழ்நிலை வரும்போது, கிறித்துவ பாதிரியார் ஒருவர் இது தவறான போராட்டம் ,ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களுக்கும் அவ பெயரை தேடி தருகின்ற இந்த செயல் வன்மையாக கண்டிக்கிறேன் ,என்று வெளிப்படையாக அவர் சொன்ன கருத்து வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்த செயலுக்கு பாதிரியார் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

 மேலும், சென்னிமலை போராட்டம் இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த கிறிஸ்தவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக அந்த மலையை ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். அப்போதெல்லாம் எந்த கிருத்துவ பாதிரியாரும், வாய் திறப்பதில்லை. இப்போது அவர்களே வாய் திறந்து இருக்கிறார்கள் என்றால் உண்மையிலேயே அது வரவேற்க வேண்டிய ஒன்று. ஏனென்றால், இந்து மதத்தை எவ்வளவு ஏளனமாக பேசினாலும், எவ்வளவு கேவலமாக பேசினாலும், அதற்காக குரல் கொடுத்து போராட்டம், ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்தப் போகிறவர்கள் இல்லை என்ற தைரியத்தில் தான், இவ்வளவு காலம் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம். இதை இந்து முன்னணி கையில் எடுத்துள்ளது .

இப்போதுதான், இந்துக்களின் எழுச்சி மற்றும் ஒருமித்த குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஆக்கிரமிப்பு செய்வது, மதமாற்றம் செய்வது, இதற்கெல்லாம் பிஜேபி ஒரு காலம் ஏற்காது என்பது கிருத்துவ பாதிரியார்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான், திமுகவும் ,அதிமுகவும் இந்த சிறுபான்மையினர் வாக்கு வங்கிகளை பணம் கொடுத்து மொத்தமாக அல்ல பார்க்கிறார்கள். ஆனால், இவர்கள் என்னதான் இனி வரும் காலங்களில் இந்த வாக்கு வங்கி அரசியல் தமிழ்நாட்டில் ஈடுபடாது. மக்கள் விழித்துக் கொண்டார்கள்.

 யார் விழித்துக் கொள்ளவில்லை என்றால், கிராமங்களில் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம், கட்சி என்றால் அர்த்தம் தெரியாதவர்கள், பணம் கொடுத்தால் எந்த பக்கமும் வாக்கு செலுத்துபவர்கள் ,இவர்கள்தான் இவர்களை விலைக்கு வாங்க முடியும். இவர்கள் எந்த கட்சிக்கும் வாக்களிப்பார்கள். அவர்களுக்கு தேவை பணம். இதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தினால், தகுதியான வேட்பாளர்கள், தகுதியான அரசியல்வாதிகள் தேர்வு செய்ய முடியும்.

மேலும்,  பணத்திற்காக தன்னுடைய வாக்குரிமையை விற்பவர்களை  தேர்தலில் வாக்களிக்க அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதேபோல் பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளை அல்லது அந்த கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் .ஒரு முறையாவது தேர்தல் ஆணையம் செய்து பார்க்கட்டும் .அதனுடைய பின் விளைவு அரசியல் கட்சிகளிடமும், மக்களிடமும் என்ன?  என்பதை புரிந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *