வழக்கறிஞர்கள் என்ஐஏ வழக்குகளில் கைது செய்யப்பபட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தேசிய புலனாய்வு முகமை வழக்குகளில் வழக்கறிஞர்களாக என் முகமது ,அப்பாஸ் ஏ முகமது யூசுப் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களை ஆஜராகி வந்தனர் . இவர்கள் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை .மேலும்,
வழக்கறிஞர்கள் இருவரையும் NIA எந்த காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளிவரவில்லை. தவிர. இவர்களே தெரிவிக்கிறார்கள், சம்பந்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகி வந்தனர். அப்படி இருக்கும்போது எந்த காரணத்திற்காக இருவரையும் என் ஐ ஏ கைது செய்து இருக்கும்? இங்கே என்ன உள்குத்து வேலைகள் நடந்திருக்கும்? என்பது குறித்து எந்த தகவலும் வெளியில் வரவில்லை.
ஆனால், இவர்கள் கைது செய்யப்பட்டது மட்டும்தான் வெளியில் வந்துள்ளது .அதற்கு வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் கைது புதிரா ?