எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் குடும்பம் மிகவும் வறுமையில் ,வாழ்ந்த குடும்பம் .ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தி வந்த குடும்பம்.

அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் உழைப்பால், மிகப்பெரிய நடிகனாகி, அரசியலில் அஇஅதிமுக என்ற ஒரு கட்சி ஆரம்பித்து ,முதலமைச்சராகி இன்று அழியா புகழ் பெற்றார். அது எல்லோராலும் முடியுமா?

அவர் நடிகராக எப்படி வாழ்ந்தார்? தனக்கு நடிப்பில் வாய்ப்பு வந்து, வருமானம் வரும்போது, பிறருக்கு உதவி செய்தே வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவி சரியாக குழந்தையும் கடவுள் கொடுக்கவில்லை.ஆனால்,

வறுமை என்று அவரிடம் யார் போய் நின்றாலும் ,யாரையும் அவர் வெறுங்கையோடு அனுப்பியதாக இதுவரை நான் கேள்விப் படவில்லை. அதனால்தான் எம்ஜிஆருக்கு வள்ளல் என்ற பட்டமும் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, அவருக்கு பெரும் புகழும், பணமும், சொத்தும், ஏற்பட்ட பிறகு, ராமாவரம் தோட்டத்தில் அங்கு போனால் யாரும் சாப்பிடாமல் வரக்கூடாது .மேலும்,

அவர் தன் சம்பாத்தியத்தை, தன் உழைப்பை மக்களுக்கு தியாகம் செய்தார். அவர் தான் அரசியல்வாதி. ஆனால்,இன்று தான் கொள்ளையடித்ததில் ஒரு பைசா கூட,கொடுக்காதவர்கள் எல்லாம் அரசியல்வாதி என்கிறார்கள்.

அதாவது உழைக்கும் மக்களுக்கு உதவி செய்து, கீழே இருப்பவர்களை மேலே கொண்டு வருவது, இதுதான் அரசியல்வாதி வேலையாக இருக்க வேண்டும். ஆனால் ,இப்போது எல்லாமே தலைகீழாக ,ஊரை ஏமாற்றுபவனை மேலே கொண்டு வருவது, அரசியல் கட்சி தலைமையின் வேலையாக இருக்கிறது. மேலும்,

இவர்களுக்கு ஒரு அரசியல் கட்சித் தலைவனாக இருக்கக்கூடிய தகுதி கூட இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், அதற்கான பணியாவது அவர்களுக்கு என்ன என்று தெரியுமா? அன்றைய அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல்வாதிகளும், மக்கள் பணிக்காக வந்தவர்கள். ஆனால்,

இன்றைய அரசியல்வாதிகள் தலைகீழாக இருக்கிறார்கள் இவர்கள் வேலை என்ன தெரியுமா? எங்கு பொறம்போக்கு நிலம் இருக்கிறது? அதை ஆக்கிரமித்துக் கொள்ளலாம். எந்த, எந்த ஏரிகளில் , மண்ணு ஓட்டியோ, ஆறுகளில் மணல் ஓட்டியோ, கோடிகளை சம்பாதிக்கலாம்? எப்படி கட்சி அடியாட்கள் மூலம் மக்களை மிரட்டலாம்?

மேலும்,எப்படி ஒயின் ஷாப்களில் கோடிகளை சம்பாதிக்கலாம்?தவிர, மக்களுடைய வரிப் பணத்தில் பொய்கணக்கு எழுதி ,கணக்கு காட்டி எத்தனை கோடி எடுக்கலாம்? எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்யலாம்? எத்தனை தலைமுறைக்கு சொத்துக்களை சேர்க்கலாம்? எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி போடலாம்? எந்தெந்த மாநிலங்களில் சொத்து வாங்கி போடலாம்? சுவிஸ் வங்கியில் எப்படி முதலீடு செய்யலாம்?

தவிர,அறக்கட்டளை சொத்துக்களை எப்படி அபகரிக்கலாம்? கோயில் சொத்துக்களை எப்படி கொள்ளை அடிக்கலாம்? அரசியல் தெரியாத மக்களை எப்படி ஏமாற்றலாம்? எப்படிப்பட்ட பொய்களை சொன்னால், அவர்கள் ஏமாறுவார்கள்?

மேலும்,கொள்ளையடித்த பணத்தில் ஆயிரம், ஐநூறு ,பிச்சை போட்டு, அல்லது அண்டா, குண்டா கொடுத்து எப்படி ஓட்டு வாங்கலாம்? தவிர, படிப்பறிவு இல்லாமலே ,இவ்வளவு கிரிமினலாக இருக்கக்கூடிய இவர்கள், படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகளிடம், தன்னுடைய மந்திரி பதவியை வைத்து, வேலைக்கு பல லட்சங்கள் வாங்கி ,எத்தனை கோடி சம்பாதிக்கலாம்?

மேலும்,இதையெல்லாம் விட ,இந்த கொள்ளையடித்த பணத்தில், கல்லூரிகளை கட்டி ,அந்த கல்லூரி நிர்வாகத்தை வைத்து கருப்பு பணத்தை எப்படி வெள்ளையாக்கலாம்? தவிர, மருத்துவமனை கட்டி ,அதில் கருப்பு பணத்தை எப்படி வெள்ளை ஆக்கலாம்? இவர்களெல்லாம் அரசியல்வாதியா? அல்லது அரசியல்வாதி என்ற போர்வையில் கொள்ளைக்கார்களா?

இவர்களையும் பல பத்திரிகை, ஊடகங்கள், அரசியல்வாதிக்கு அர்த்தம் தெரியாமல் ,இவர்களை அரசியல்வாதி என்று எழுதிக் கொண்டிருப்பார்கள். இதில் வேரு இந்த பத்திரிகைகளின் லேபில் இந்து, இந்தியன்எக்ஸ்பிரஸ் ,தினமலர் ,தினத்தந்தி ,தினமணி இப்படியெல்லாம் இந்த பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும், இந்தப் போலிகள் பேட்டி கொடுக்க ,இவர்களை கவுரவமானவர்கள் என்று எழுதிக் கொண்டிருப்பார்கள்.

மேலும்,அரசியல்வாதிக்கு அர்த்தம் தெரியாத கூட்டங்கள், மக்களுக்கு அரசியல்வாதி என்றால் ,எப்படி இருக்க வேண்டும் ?என்ற உண்மை தெரியாத மக்கள், படித்தவர்களும் ,சேர்ந்து தான், அரசியல்வாதிக்கு அர்த்தம் தெரியாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் ‌. அதனால்,இந்த உண்மைகளை பத்திரிக்கை துறையும், அரசியல் கட்சியினரும், வாக்காளர்களும் அவசியம்,தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், தேவையில்லாத செய்திகளை எல்லாம் பத்திரிக்கையில் போட்டு அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆனால், தேவையான செய்திகள் எது? என்பது கூட தெரியாமல், இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகள், நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,

அரசியல் என்பது தன்னுடைய குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் வேலையல்ல. அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் வியாபாரம் அல்ல. அரசியல் என்பது மக்களை ஆதிக்கம் செலுத்தும் ரவுடிகள் வேலையல்ல. மேலும் ,அரசியல் என்பது ஊடகங்களில் பேசி விட்டுப் போகும் பேச்சாளர்கள் வேலையல்ல. மேலும்,

இதுவரை பல கோடிகளை மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்காவது இந்த உண்மையும் , அவசியமான இந்த செய்தியை மக்களுக்கு வெளிப்படுத்தி இருக்குமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

மேலும், பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அரசியல்வாதி என்றால் எப்படி இருக்க வேண்டும்? என்ற உண்மை தெரியாது. இந்த போலி அரசியல்வாதிகளிடம் ஏமாந்து இந்த மக்களுக்கு அரசியல்வாதி என்றால் அர்த்தம் தெரியவில்லை.தவிர,அரசியல் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், ஏதோ கட்சிக்கு கொடியை பிடிப்பவன் எல்லாம், அரசியல்வாதி என்று நம்புகிறார்கள்.

தவிர,கட்சி கொடியை பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவதாக பேசிக் கொண்டு, இருப்பவனெல்லாம் அரசியல்வாதியா? இல்லை இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் பேசுபவன் எல்லாம் அரசியல்வாதியா? அதற்கான தகுதி இவர்களுக்கு இருக்கிறதா?

ஒரு அரசியல்வாதி எப்படி வாழ வேண்டும்? என்பதற்கு எம் .ஜி. ஆர். மிகப்பெரிய ஒரு உதாரணம். அதனால் தான், தான் இறக்கும்போது தன்னுடைய சொத்துக்களை அனாதை குழந்தைகளுக்கும், காது கேளாத குழந்தைகளுக்கும், தன் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு போனார்.

மேலும்,அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவுக்கு இல்லை என்றாலும், மனசாட்சியுடன் மக்களுக்காக, பணியாற்றக்கூடிய அரசியல்வாதிகள்? எத்தனை பேர் எத்தனை அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள்? என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா?

மேலும், அடியாள் வேலைக்கு தகுதியான உடம்பைக் காட்டக்கூடிய ஊரை ஏமாற்றும் கூட்டம் எல்லாம், தன்னை அரசியல்வாதி என்று அரசியல் தெரியாதவனிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே,இந்தப் போலி அரசியல்வதிகளிடம் மக்கள் ஏமாறாதீர்கள். இந்த போலிகளின் பந்தாக்களை பார்த்து ஏமாறாதீர்கள். மேலும்,போலிகளின் கட்சி அடையாளங்களையோ, அல்லது அவர்களுடைய வாய் பேச்சுக்கலையோ, அல்லது அவர்களுடைய போட்டோ பேனர்களையோ பார்த்து இவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள் என்று தீர்மானிக்க முடியுமா ?

மேலும்அரசியல்வாதி என்றால் எப்படி இருக்க வேண்டும்? அரசியல்வாதிக்கு தகுதி இருப்பவர்களை மட்டும் அரசியல்வாதி என்று தீர்மானியுங்கள்.

மேலும்,போலிகளிடம் ஏமாறுவது தான் இன்று நாட்டில் ஊழல் ஆட்சிக்கும், ரவுடியிசத்துக்கும் அரசியல் ஆகி, அது மக்களிடமே அந்த வினையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இவர்களெல்லாம் அரசியல்வாதியா? அல்லது பொது சொத்துக்களை கொள்ளையடிக்க வந்தவர்களா? எதற்காக ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள்? எதற்காக இலவச பொருட்களை கொடுக்கிறார்கள்? மீண்டும் ஊழல் ஆட்சியை கொடுப்பதற்கு தான் இலவசங்களும், ஓட்டுக்கு பணமும், கொடுப்பவர்கள் அரசியல்வாதியா? யார் அரசியல்வாதி? என்பதை இனியாவது தமிழக வாக்காளர்கள் சிந்திப்பீர்களா?

மேலும்,அரசியல்! என்பது மக்களுக்காக அர்ப்பணிப்பது. இதை எத்தனை பேர்? எத்தனை கட்சிகளில் இன்று செய்கிறார்கள்? ஒரு போன் செய்தால் கூட, பல அரசியல் கட்சிகளில் கட்சியினர், எடுப்பதில்லை. அந்த அளவுக்கு இவர்கள் பிஸி என்று காட்டிக் கொள்வார்கள். ஆனால், மக்கள் பணி என்ன? அதுவாவது இவர்களுக்கு தெரியுமா?

அதனால், பொதுமக்கள் இனிமேலாவது, புரிந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான அரசியல்வாதிக்கு வாக்களியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *