எம்ஜிஆர், சிவாஜி திரைப்படங்களுக்கு இணையாக, இன்றைய ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் திரைப்படம் எத்தனை கோடி வசூல் ஆனாலும், இணையாக முடியுமா?

அரசியல் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எம்ஜிஆர், சிவாஜி நடித்த திரைப்படங்கள் சமூக முன்னேற்றத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும்அடிப்படையாக இருந்தது .அதேபோல், இரண்டு நடிகர்களும் கதைக்கு முக்கியத்துவம், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார்கள். அவர்கள் நடித்த படங்கள் அனைத்தும் சமூக நலனை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.பணம் என்பது அடுத்த கட்டத்தில் தான் அதை வைத்திருந்தார்கள்.

ஆனால், இன்றைய நடிகர்கள் பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்றவைக்கு அடுத்த நிலையில் வைத்திருப்பார்கள் .இவர்கள் எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும், எம் ஜி ஆர், சிவாஜி போல் இனி திரைப்படங்களில் எந்த ஒரு நடிகரும் அதற்குரிய இடத்தை இன்னும் பிடிக்கவில்லை. காரணம் அவர்களுக்கு அமைந்த கதை, கதை வசன கர்த்தாக்கள், இசை அமைப்பாளர்கள், கவிஞர்கள் எல்லோரும் ஒரு கலை ஞானிகளின் கூட்டு அமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. அவர்கள் எல்லோரும் கலை படைப்பாளிகள்.அந்தப் படைப்புகள் அத்தனையும் தெய்வீகத் தன்மை கொண்டது.

இன்னும் கேட்டால் எம்ஜிஆர் ,சிவாஜி நடித்த கலர் படங்களுக்கு முன்னால் கருப்பு வெள்ளை படம் மிகப்பெரிய தலை பொக்கிஷங்களாக இன்றும் இருந்து வருகிறது. அது என்றுமே மக்களின் இதயத்தில் அந்த இசை, பாட்டு, நடிப்பு, எல்லாம் மக்களின் இதயத்திலும் ,வாழ்க்கையிலும் பின்னிப்பிணைந்தது. அதனால் தான், நடிகர்கள் புகழின் உச்சிக்கு வர முடிந்தது. அதுவும் அந்த காலத்தில் கூத்தாடி என்று பேசுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் இவ்வளவு பெரிய ஒரு உயர்வை அடைந்தது.

மேலும்,எம்ஜிஆர், சிவாஜி காலத்து திரைப்படங்கள் சமுதாயத்தை சீர்படுத்தும் கதைகளாக தான் இருந்தது. சமுதாயத்தை சீரழிக்கும் படங்களாக தான் இப்போது இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள், வெட்டு, குத்து ,கொலை, அசிங்கமான வார்த்தைகள், கீழ்த்தரமான வார்த்தைகள்,  இவையெல்லாம் அக்காலத்தில் ஒரு படத்தில் கூட பார்க்க முடியாது, அப்போது படிக்காத மக்கள் அதிகம் .இப்போது படித்து பட்டம் பெற்ற மக்கள் அதிகம். ஒருவேளை இது படித்த அறிவாளிகள் பார்க்கின்ற படமாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா?மேலும்,

இப்போது வரக்கூடிய ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களும் சில திரைப்பட இயக்குனர்களின் படங்களும், சமுதாயத்தை விட்டு அல்லது விலகி படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தவிர்த்து ஜாதி, மத கருத்துக்களை வைத்து படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட படம் தான் ஜெய் பீம் என்ற திரைப்படம், இப்படிப்பட்ட படங்களுக்கும் பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் தேசிய விருதை எதிர்பார்த்து மத்திய அரசை விமர்சனம் செய்கிறார்.

ஜாதி. மதம் என்பது ஒரு மனிதனின் பிறப்பு அடையாளம் .அதை மாற்றுகிறேன் அல்லது அதை வைத்து ஏற்ற தாழ்வு இல்லாமல் மாற்றி விடுகிறேன் என்று பல பொய்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் என்பது காலத்தால் தான் மாற்ற முடியுமே தவிர, சினிமாவால் மாற்ற முடியாது. அப்படி பார்த்தால் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லாம் முதலமைச்சராக வந்துவிடலாம். அல்லது மந்திரியாக வந்துவிடலாம்.

 ஆனால், எப்படியோ எம்ஜிஆர் ஒருவரால் மட்டும் தான் அது முடிந்தது. அதுவும் காலத்தின் மாற்றத்தால் ஏற்பட்ட ஒரு நிகழ்வு தான். இந்த காலத்தில் ஏமாந்து கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. நிழல் என்பது நிஜமாகாது. நிஜம் நிழலாகாது. அதாவது கற்பனையில் நிழல் உலகத்தில் பேசுகின்ற அல்லது நடிக்கின்ற இந்த சினிமா உலகம் வாழ்க்கைக்கு எதுவும் உதவாது.

 எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் உள்ள திரைப்படங்களை எடுத்துப் பாருங்கள், அதில் சொல்லப்பட்ட கருத்துக்களை எடுத்துப் பாருங்கள், பாட்டில் வரும் கருத்துக்களை எடுத்துப் பாருங்கள், இப்போது வரக்கூடிய இந்தப் படங்களில் அதில் ஒரு படுமாவது தேறுமா? என்பதை ஆய்வு செய்து பாருங்கள். மேலும், அன்றைய சினிமா துறையில் கலை ஞானிகள் அதற்காகவே பிறப்பெடுத்தவர்கள்.

ஆனால், இப்போது இவர்கள் நடிப்பது பணத்திற்காகவே, அப்போது நடித்த கலைஞன் புகழுக்காக வாழ்ந்தான் ,இப்பொழுது பணத்திற்காக நடிக்கிறான். ஏமாந்த கூட்டம் அவர்களுடைய நடிப்பை பார்த்து கைதட்டி விசில் அடித்துக் கொண்டிருக்கிறது .அவர்களுக்கு வாழ்க்கையின் எந்த அர்த்தமும் தெரியாது. ஒரு பக்கம் உண்மையும் தெரியாது. வாழ்க்கை என்பது ஜாலி பொழுதுபோக்கு என்று வாழ்ந்து விட்டு சாகும் ஒரு அர்த்தமற்ற வாழ்க்கைக்கு, இந்த சினிமா எப்படிப்பட்ட கதை எடுத்தாலும் ,அவர்கள் எப்படி நடித்தாலும், கைதட்டி ரசிக்கும் கூட்டங்கள் இருக்கும் வரை, இவர்கள் 500 கோடி , 200 கோடி என்று வசூல் செய்வதை பெருமையாக நினைப்பது ஒரு சமூக ஏமாற்றம்தான்.

 இன்றும் எத்தனையோ அறிவாளிகள், புத்திசாலிகள் இந்த படங்களை எல்லாம் நான் பார்ப்பது இல்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இன்றைய இளைஞர்களுக்கு அது புரியாமல் இருக்கலாம். அல்லது இந்த காலத்தில் இதுதான் அவர்களுக்கு சிறந்தது என்று நினைக்கலாம். உண்மை என்று ஒன்று இருக்கிறது. அது அர்த்தமுள்ள வாழ்க்கையின்  நோக்கம்.

இங்கே வாழ்க்கை என்ற புத்தகத்தை படிக்காமல் போகிறவர்கள், நிச்சயம் அவர்கள் படித்திருந்தாலும், அவர்கள் படிக்காமல் இருந்திருந்தாலும் ,அல்லது அவர்கள் பல பட்டங்கள் வாங்கி இருந்தாலும், எதுவும் இவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போகும்போது கூட வராது ஆனால் இவர்களுடைய கர்மாவின் கணக்கு மட்டும் தொடர்ந்து வரும்.

 அதனால் இளைய சமுதாயம் வாழ்க்கை கல்வியும் உண்மையும் ஆத்ம ஞானத்தையும் படைக்காமல் இந்த உலகத்தை விட்டுப் போகும் போது அதுதான் உலகை விட்டு பிரிந்தாலும், உடன் வருவது, அது ஒன்று தான்.அதிலும் இன்றைய இளைஞர்கள் செல்போனில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் உலகம் என்று நம்பிக்கை ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .

அதுபோல்தான் இந்த சினிமாவும் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் உழைப்பை ,திறமையை கேவலமாக்கி கொண்டிருந்தால், உணவுக்கு கை ஏந்தும் போது அதனுடைய வேதனையும், உண்மையும் புரியும். போலி வாழ்க்கை எப்போதும்  நிம்மதையும், சந்தோஷத்தையும் தராது .

அது போல் தான் உண்மை இல்லாதது நடிப்பு, அதில் சந்தோஷம் காண முடியாது, நிம்மதி காண முடியாது. பொழுதுபோக்கு என்று எந்த சினிமாவை நம்பி ஏமாறுகிறார்களோ, அவர்களுடைய வாழ்க்கையில், எக்காலத்திலும் உயர்ந்த நிலைக்கு அவர்களால் செல்ல முடியாது. ஒருவேளை அவர்களுடைய தாய் ,தகப்பன் சேர்த்து வைத்து விட்டுப் போனால், அதை வைத்துக்கொண்டு உழைக்காமல் பொழுதுபோக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். 

 படித்த இளைஞர்கள்,இனிமேலாவது சிந்தித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து விட்டு போவதாக உங்கள் வாழ்க்கை இருக்க வேண்டுமே ஒழிய, இந்த பொழுதுபோக்கு படங்களை பார்த்து பொழுதுபோக்காக வாழ்ந்து விட்டு போகாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *