ஜூலை 25, 2024 • Makkal Adhikaram

எல் அண்ட் டி கம்பெனி யின் எந்த வேலையாக இருந்தாலும் ,அதில் தரமும், நீண்ட நாள் உழைப்பும் உள்ள தனித்துவம், மக்கள் மத்தியில் L & T கம்பெனி பெயர் பெற்று உள்ளது என்பதை மறுக்க முடியாது.
மேலும் சென்னை புறவழி சாலை திட்டத்தை இன்று அமைச்சர் ஏ .வா .வேலு பார்வையிட்டார். அப்போது அவருக்கு இப்பணிகள் குறித்த விளக்கத்தை எல் & டி யின் தென் மண்டல தலைமை அதிகாரி மோகன்ராஜ் , இப்பணிகள் குறித்த தரத்தையும், அதனுடைய செயல்பாட்டையும், அமைச்சருக்கு விளக்கம் அளித்தார்.

மேலும் அமைச்சர் ஏ.வா.வேலு இப்பணிகள் குறித்து விவரம் கேட்டறிந்ததோடு இது எங்கிருந்து எவ்வளவு தூரம் போடப்பட்டுள்ளது? எத்தனை கிலோமீட்டர் (12.8 )கிலோ மீட்டர் போடப்பட்டுள்ளது ? பணிகள் எத்தனை சதவீதம் (70%) முடிவடைந்துள்ளது?

மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஏ.வா. வேலு, பணிகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதை எல் அண்ட் டி கம்பெனியின் டீம் ஒர்க் பொறியாளர்கள் மிகவும் வரவேற்றுள்ளனர் .தவிர, இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வா .வேலு, நெடுஞ்சாலைத்துறை செயலாளர் செல்வராஜ், திட்ட இயக்குனர் ராமன், மேலாண்மை இயக்குனர் துரைராஜ், கண்காணிப்பாளர் திலகவதி, எல் அண்ட் டி யின் தென் மண்டல தலைமை அதிகாரி மோகன்ராஜ், தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.