ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram

ரயில்வே நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மின்சார ரயில்கள் கேன்சல் செய்வதால் நேற்று ரயில் பயணிகள் கடும் இண்ணல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே அவர்களுடைய பயணங்களை தொடர வேண்டி இருந்தது.

மேலும், 2 மணியிலிருந்து சுமார் 8.00 மணி வரைக்கும் ரயில்கள் திருவள்ளூர் வரைக்குமே வந்துள்ளது .திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள்? இடையில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களோ அல்லது ரயில்வே நிர்வாகமும் இதைப்பற்றி ரயில் பயணிகளிடம் எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை.

ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வது தான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அவர்களை இன்னல் படுத்துவது நோக்கமாக இருக்கக் கூடாது. இந்த பிரச்சனை மத்திய அரசை குறை சொல்லும் அளவுக்கு ரயில் பயணிகள் பலர் பேசி வந்தனர். அதனால், மத்திய அரசாங்கம் இது போன்ற அதிகாரிகளின் தவறுகளை அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதை தங்கள் கவனத்திற்கு இச்செய்தியின் வாயிலாக ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.