அரசு ஊழியர் தன்னுடைய கடமையை செய்யத் தவறி விட்டார் என்றால், அவர் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை பெற்றுத்தர முடியும். ஆனால், அவர்கள் இந்திய தண்டனைச் சட்ட குற்றப் பிரிவு 197 காரணம் காட்டி தப்பித்துக் கொள்கிறார்கள்.

அது எப்படி என்றால், ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்ய தவறி இருக்கும் பட்சத்தில் ,அவர் மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு பதிவு தபாலில் அனுப்பி, அந்தப் பதிவு தபால் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை அட்டை (அக்னாலேஜ்மென்ட் கார்டு) நம் கைக்கு வந்த பிறகு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், ஊழல் பொய்யான தகவல் கொடுத்தல், பொய்யான ஆவணம் தயாரித்தல், குறைவான மதிப்பீடு செய்த குற்றங்கள், பொதுமக்கள் கொடுத்த புகார் மனுவை அலட்சியம் செய்தல், போன்ற பிரச்சனைகளுக்கு வழக்கு தொடர அனுமதி பெற தேவையில்லை .அது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 166, 354 ,370 ,375, 376, 509 போன்ற குற்றங்களுக்கு அரசு ஊழியர் செய்த தவறுக்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

இது அரசு ஊழியர்கள் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 1. 8 .2014இல் ரிட் மனு எண் 20 527 /2014 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவின் படி, பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21 9 2015 அன்று அரசாணை வெளியிட்டது .
%20(1)%20(1).jpg)
ஆனால், அதிகாரிகள் இந்த சட்டத்தையும் மதிக்கவில்லை. அரசாணை மதிக்கிறார்களா என்பது தெரியவில்லை. அதனால், மக்கள் பணி செய்ய தவறுகிற அரசு ஊழியர்கள், அனைவரும் கடமை தவறிய அலுவலர்களே, அவர் என்று சட்டம் தெரிவிக்கிறது. இது போன்ற அலுவலர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம் என்று இந்திய தண்டனைச் சட்டம் 18 60 பிரிவு 166 தெரிவித்துள்ளது. அந்த தண்டனையை பெற்று தர மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை.