ஒவ்வொரு நகராட்சிகளிலும், தூய்மை பணியாளர்கள் போராட்டம் வலுப்பதால், திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலி .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தூய்மை பணியாளர்கள் கோரிக்கை அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் இவர்களை பணி நிரந்தரம் செய்ய வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அப்போதைக்கு அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுகவில் தேர்தல் வாக்குறுதி என்பது கடன்காரனுக்கு ஏதோ ஒரு பதில் சொல்கிற வாக்குறுதிகள் போன்று பேசி விடுகிறார்கள். இன்று அது திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது.

இதை எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அரசியல் ஆக்கி பார்க்கிறார்கள். அதே அரசியலை இவர்களுடைய கூட்டணி கட்சிகளும் இப் பிரச்சினையை அரசியலாக்கி பேசி வருகிறார்கள்.

இது இரண்டுக்கும் இடையில் தூய்மை பணியாளர்கள் ஒரு பக்கம் உயர்நீதிமன்றத்தில் ,இவர்களுக்காக வழக்கு தொடர்ந்து சில அமைப்புகள் போராடுகிறது. அவர்கள் இந்த ஒப்பந்தம் தொழிலாளர்களை நிரந்தர செய்ய வேண்டும் என்று இவர்களுடைய கோரிக்கை.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை திமுக ஆட்சியில் போடவில்லை .அது கடந்த ஆட்சியிலே இது போன்ற பல துறைகளில் ஒப்பந்தம் போடப்பட்டு பணியாளர்களை பணியமர்த்தி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சிப்காட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் வேலுமணி அமைச்சராக இருந்தபோது, சிப்காட்டில் பணியாற்றுகிற அவ்வளவு தொழிலாளர்களும், இன்று தனியார் இடம்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றுகிறோம் என்கிறார்கள். சில பேரு எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சங்கத்தை உருவாக்கிக் கூட கேட்டுப் பார்த்தார்கள் .அங்கும் வேலைக்கு ஆகவில்லை. சிலர் நீதிமன்றத்திற்கும் போனார்கள். அதற்கும் நீதி கிடைக்கவில்லை. நீதி என்பது தற்போது ,ஏழை எளிய ,நடுத்தர மக்களுக்கு இன்னும் எட்டா கனியாக தான் இருக்கிறது.

சட்டம் சாமானிய மக்களுக்கு நீதியை பெற வேண்டும் என்றால், அதற்கான தொகை அவர்களால் செலவு செய்து போராட முடியவில்லை. இதையெல்லாம் எந்த நீதிபதியும் இதைப் பற்றி பேசவில்லை. அவர்கள் அரசியல்வாதிகளை தான் முக்கியத்துவமாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் இந்த ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கொடுக்கவில்லை.

இப்படி இருந்தால், நீதித்துறை மக்களின் வாழ்க்கை, அதிகார வர்க்கத்தோடும் ,ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களோடும் ,போராட வேண்டி இருக்கிறது.

இதற்கெல்லாம் நீதித்துறையின் சட்டத்தால், சாமானிய மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் நீதி அதிக விலையாக இருக்கக் கூடாது. அந்த அளவுக்கு அதை குறைந்த பணம் செலவு செய்து, குறைந்த நாட்களில் அந்த நீதி அவர்களுக்கு கிடைக்க வேண்டும் அதுதான் நீதித்துறையிடம் ஏழை எளிய நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு.

இப்போது அரசாங்கத்திடம் போராடிக் கொண்டிருக்கின்ற தூய்மை பணியாளர்களுக்கு, அரசாங்கம் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவது கடினம். காரணம் இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக தான் பணியமர்த்தப் பட்டுள்ளார்கள்.அதில் அவர்கள் சொன்ன அந்த கோரிக்கை வேண்டுமானால், நிறைவேற்றலாம் . மேலும் ,

இந்த தேர்தல் வாக்குறுதியை கொடுப்பதற்கு திமுகவும், ஸ்டாலினும், அதற்கு தகுதியற்றவர்கள். அதை நம்பி மக்கள் வாக்களித்தால் ,நிச்சயம் ஏமாறுவீர்கள் .ஏமாற்றப்படுவீர்கள். அதனால், இந்தப் போராட்டத்தில் உங்களுக்கு பலன் கிடைக்குமா? மேலும்,எப்படியும் பேசுபவர்களின் பேச்சுக்களை நம்பி ஏமாறுகிற கூட்டமாக தான் இன்று வரை தமிழகத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் ஏமாற்றம்.

அதனால், இது ஒரு உங்களுக்கு அரசியல் அனுபவத்தை திமுக ஆட்சியாளர்கள் பற்றி கொடுக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *