
திருபுவனம் கோயில் காவலாளி இறப்பு முடிந்து ஒரு சில நாட்கள் தான் ஆன நிலையில்,, கிருஷ்ணகிரி பகுதியில் 13 வயது சிறுவன் கடத்தப்பட்டு,கொலை செய்யப்பட்டுள்ளான். அவன்,

எதற்காக கடத்தப்பட்டான்? ஏன் கொலை செய்யப்பட்டான்? என்று எந்த விபரமும் இதுவரை காவல்துறை தரப்பிலிருந்து வெளிவரவில்லை. மேலும், பையனின் உறவினர்கள் அந்த சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறை பொதுமக்களை களைத்து சென்றது. காவல்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கையிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. அதற்கு காரணம்?
ஒவ்வொரு நாளும் திருட்டு, கொலை, கற்பழிப்பு,கொள்ளை, வழிப்பறி திமுக ஆட்சியில் தொடர்கிறது. தவிர,சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழ்நாட்டில் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இது எதனால் என்றால்?காவல்துறையின் செயல்பாடுகள் சமூக நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஆனால், அது சட்டத்தை வளைக்கும் நோக்கத்தில் இருந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து தமிழ்நாட்டில் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். மேலும், காவல்துறையினருக்கு திருபுவனத்தில் கொடுக்கப்பட்ட தண்டனை தமிழகத்தில் உள்ள காவல்துறையினர் ஒரு பக்கம் அதிர்ச்சி. ஆனால், அவர்கள் அதிகாரம் மட்டுமே பார்க்கிறார்களே ஒழிய,மனிதபிமானத்தை பார்க்கவில்லை. காவல்துறை பணி இல்லையென்றால் அவர்களும் ஒரு சாமானிய மக்கள்,மனிதர்கள் என்பதை அவர்களில் பெரும்பாலோர் உணரவில்லை.

இதற்கு காரணம் அரசியல் கட்சியினர் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். அந்த அரசியல் கட்சியினர் சமூகப் பணி செய்பவர்கள் அல்ல, சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிப்பவர்கள் இவர்கள்தான் தற்போது காவல்துறையினருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். இது பல ஆண்டுகளாக காவல்துறையின் பணி சமூக நோக்கத்தை விட்டு விட்டு வியாபார நோக்கத்துடன் போய்க்கொண்டிருக்கிறது.

அதனுடைய விளைவு தான் இன்று திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்கிறது. மேலும்,இது பற்றி முதல்வர் ஸ்டாலின் காவல்துறையில் பணியாற்றுபவர்களின் பணி ஒழுக்கம், நேர்மை, இதைப்பற்றி ஆய்வு செய்து அறிக்கையை அனுப்ப காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். தவிர,
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வருகின்ற புகார்கள்,அதற்கு எப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? அதை நேர்மையான முறையில் எடுத்திருக்கிறார்களா ? எங்கெல்லாம் தவறு நடந்திருக்கிறது?எங்கெல்லாம் தவறுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்?

குற்றவாளிகளுக்கும்,காவல்துறைக்கும் தொடர்பு இருக்கிறதா? குற்றப் பின்னணி உள்ளவர்கள் எவ்வளவு பேர்? சமூக நோக்கத்துடன் பணியாற்றக்கூடிய காவலர்கள் எத்தனை பேர்? இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் காவல்துறை டிஜிபியிடம் இருந்து அறிக்கை கேட்க வேண்டும்.
ஒழுங்காக பணிக்கு வருகிறார்களா ? பணியை சரிவர செய்கிறார்களா? இப்படி காவல்துறையைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய நிலைமைக்கு இன்றைய காவல்துறை தள்ளப்பட்டு இருக்கிறது.
அதனால்,தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொது மக்களை இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேறு வழியில்லை.