ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.மாமந்தூர் கிராமத்தில் 6 வயது சிறுவர் தொடங்கி, 80 வயதைக் கடந்த முதியவர்கள் வரை சுமார் 15 பேர் வெறிநாய்களின் கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகாலையில் வயல் வேலைக்குச் செல்பவர்கள், சிறுவர்களைக் குறிவைத்து வெறிநாய்கள் விரட்டி விரட்டி தாக்குவதாகக் கூறப்படுகிறது. இதேபோல் பக்கத்து கிராமமான நைனார்பாளையம் அரசு மருத்துவமனையிலும் 10க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.