காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பால் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவது தான் சமூக நீதி போராட்டமா?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், மக்களிடம் ,அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு, ஃபிராடு, பித்தலாட்டங்களை செய்து கொண்டு, உத்தமர்களாக பேசிக்கொண்டு ,வேஷம் காட்டிக் கொண்டு இருப்பது தான், தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரம். ஏனென்றால் பொது மக்களுக்கும் அரசியல் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. அந்த வகையில் அவர்களுக்கு மிகவும் சௌகரியம்தான். மேலும்

 இவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தார்கள்? என்று போட்டு காட்டு கொண்டிருப்பது சில பத்திரிகைகள், இவர்களை தியாகிகளாக போட்டு காட்டிக் கொண்டிருக்கும் சில பத்திரிகைகள், இப்படி இந்த பத்திரிகைகளால், இந்தப் போராட்டம் பற்றி ஒரு பத்திரிக்கையாவது உண்மையை மக்களுக்கு சொல்லி இருக்கிறதா? இல்லை.

 நாட்டில் லட்சக்கணக்கான பத்திரிகைகள் இருந்து என்ன? இல்லாவிட்டால் என்ன? எதற்கு பத்திரிக்கை நடத்துகிறோம் என்று கூட தெரியாமல், பத்திரிகை நடத்தி வருமானம் பார்த்துக் கொள்வது பத்திரிகையின் வியாபாரமா? மேலும் பொதுமக்களுக்கு அரசியல் கட்சி என்றால் இதுதான் அரசியல் கட்சி. இப்படி தான் ரவுடிசம் செய்வார்கள், அவர்களையும் நல்லவர்களாக எழுதிக் கொண்டு, காட்டிக் கொண்டிருப்போம் .

மக்களுக்கு அரசியல் கட்சிக்கு வந்தவர்கள், எப்படி ஒழுக்கமான, நேர்மையானவர்களாக சட்டத்தை மதிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும், என்ற அர்த்தம் கூட தெரியாதவர்களை எல்லாம் இன்று அரசியல் கட்சி என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மைகள் கூட தெரியாமல், பலர் பெரிய பத்திரிகை, தொலைக்காட்சிகளில் தன்னைப் பெரிய பத்திரிக்கையாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சிறிய பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள எத்தனை அரசியல் கட்சி இருந்தாலும்.முதலில் பதவிக்கு வர ஆசைப்படுபவர்கள் மக்களுக்கு சேவை செய்து, சட்டத்தை மதித்து ,அதற்கு நேர்மையும், ஒழுக்கமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற அர்த்தம் கூட, தெரியாதவர்களை எல்லாம் இன்று அரசியல் கட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கட்சிக்காரர்கள் எல்லாம் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு என்ன நன்மை செய்து விடப் போகிறார்கள்?

 மேலும், ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவி வகித்துக் கொண்டு, ஒரு சமூகத்தை இழிவாக பேசுவது கூட தெரியாமல், இவருக்கு வக்காலத்து வாங்கும் அரசியல் கட்சியினர், பத்திரிகைகள் இதைப் பற்றி தெரிந்து பேசுகிறார்களா? அல்லது புரியாமல் பேசுகிறார்களா? நாட்டில் எந்த சமூகமும் இழிவானது இல்லை. அதை இழிவுபடுத்தி பேச ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு என்ன தகுதி இருக்கிறது? அப்படி இழிவு படுத்தி பேசுபவர் ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பதற்கு அவருக்கு தகுதியா?

 மக்களின் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, மோடி என்ற சமூகம் இவருக்கு என்ன கெடுதல் செய்தது? அதை இவரால் நிரூபிக்க முடியுமா? அப்படியே செய்து இருந்தாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதை பொதுவெளியில் பேசுகின்ற போது, சட்டம் அதை அனுமதிக்குமா? இதில் நீதிமன்றத்தின் தவறு என்ன? மோடி சமூகத்தை சேர்ந்த ஒருவர் இவர் மீது வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம், இவருக்கு பதவி நீக்கம் செய்து, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

 இது நீதிமன்றத்தின் குற்றமா? அல்லது இவர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கிறார்களா? அல்லது சட்டத்தை அவமதிக்கிறார்களா? எதுவும் தெரியாமல், கூட்டத்தைக் காட்டி கூச்சல் போடுவது தான், இன்றைய அரசியல் கட்சிகளின் அதிகார உரிமையா? சட்டம் என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சி என்பது சமூக நன்மைக்கானது. இதை எல்லாமே இன்று எந்த நோக்கத்திற்காக எதற்காக இருக்க வேண்டும்? என்ற நிலையிலிருந்து மாறுபட்டு உள்ளது. இதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினரின் சுயநலத்திற்காக, அரசியல் கட்சி இல்லை என்பதை பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

அரசியல் கட்சி என்பது பிறருக்கு நன்மை செய்ய தானே தவிர, கெடுதல் செய்வதற்கு அரசியல் கட்சி தேவை இல்லை. அதை வைத்துக் கொண்டு, இன்று எப்படி யாரை பழி வாங்கலாம்? யாரை எப்படி மிரட்டலாம்? இதை வைத்து அதிகார பின்னணியில் இருப்பவர்களிடம் கொள்ளையடிக்க, ஊர் சொத்துக்களை பங்கு போட்டு சாப்பிட ,பயன்படுத்துகிற வேலைக்கு இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை இருக்கிறது.

 அதனால், பொதுமக்கள் உஷாராகி, இவர்களுடைய ஏமாற்று வேலைகளை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது உங்களுடைய புத்திசாலித்தனம். ஏமாறுவது உங்களுடைய முட்டாள்தனம். பொதுநலமில்லாமல் சுயநலமாக இருப்பது உங்களுடைய அறியாமை. மேலும் உடம்பு பலத்தைக் காட்டி எளியவர்களை வீழ்த்தி, வலியவர்களாக காட்டிக்கொண்டு பொது சொத்துக்களை சாப்பிடுவதற்கு அரசியல் கட்சி இல்லை. அதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால், இதற்கு தகுதியானவர்கள் யார் என்பதை நிர்ணயம் செய்து கட்சி வேறுபாடுகளை கலைந்து வாக்களியுங்கள். சமீபத்தில் நடந்த ஈரோடு சட்டமன்ற தொகுதியில் 21 சதவீதம் நோட்டாவிற்கு பதிவாகியுள்ளது. உண்மையிலேயே அந்த 21% வாக்காளர்கள் அரசியல் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தெரிந்த உண்மை.

 இனிமேல், இந்த ஓட்டுக்களை வீணாக்காமல் சுயேச்சையாக இருந்தாலும்,தகுதியானவர்கள் நின்றால் கூட, அவர்களுக்கு வாக்களிக்கலாம். ஏனென்றால் கட்சி என்பது இன்று சமூக மக்களுக்கு எதிராக செயல்படுத்தப் படுகிறது. ஆட்சிக்கு வரும் வரை ஆயிரம் முறை கும்பிடுவதும், காலில் விழுவதும் ,விழுந்து விட்டு பிறகு அந்த மக்களையே இளக்காரமாகவும், அடியாட்களை போன்று மிரட்டுவதும், இதுவா அரசியல் கட்சி? அதற்கான தகுதி இவர்களுக்கு இருக்கிறதா? என்பதை ஒரு முறைக்கு 100 முறை சிந்தியுங்கள். உண்மை உங்களுக்கே புரியும்.

 தகுதியானவர்கள் எப்படி இருப்பார்கள் ?அவர்கள் அமைதியாக, நேர்மையானவர்களாக, ஒழுக்கமானவர்களாக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு போராடுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் உண்மையான அரசியல் கட்சியினர் என்பதை புரிந்து கொண்டால் சரி.

மேலும், ராகுல் காந்தி இளம் வயதில் உலக போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் மகள் ஒருவருடன் போதைப் பொருட்களுடனும், கோடிக்கணக்கான பணத்துடனும், பாஸ்டன் விமான நிலையத்தில் அமெரிக்க அரசால் ராகுல் காந்தி  கைது செய்யப்பட்டார்.

அப்போது இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் சென்று சோனியா அழுது எந்த தண்டனையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி அமெரிக்க பத்திரிகைகளில் அப்போது வெளிவந்துள்ளது. இப்படிப்பட்டவர் அரசியல் கட்சி தலைவர் என்ற பெருமையில், பிரதமர் ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார். இவருக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்? என்பதை பொதுமக்கள் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *