காஞ்சிபுரம் பாபு ஷா பட்டு வியாபார கடையில் தினம் கோடிக்கணக்கில் வியாபாரமா? இது வருமான வரித்துறைக்கு தெரியாதது ஏன்? – காஞ்சி நகர மக்கள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

காஞ்சி என்றாலே பட்டுக்கு பெயர் போனது. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தில் பாபு ஷா என்ற துணிக்கடையில், ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வியாபாரம் என்று பொதுமக்களே பேசுகிறார்கள்.

இது பற்றி பொது மக்கள் பேசுவது, எந்த கட்சிக்காரன் போய் டொனேஷன் என்று கேட்டாலும்,கொடுத்து விடுவார்களாம். மாநாடு, மீட்டிங் எதுவானாலும், கொடுத்து விடுவார்களாம்.

அதனால், கட்சிக்காரர்கள் இந்த கடை வியாபாரத்தை பற்றி எங்கும் புகார் அளிப்பதில்லை என்று தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தக் கடை முதலாளிகளுக்கு மத்தியிலும் சரி,மாநிலத்திலும் சரி, நேரடி அரசியல் செல்வாக்கு உண்டு என்கிறார்கள். மேலும்,

இவர்கள் எந்த ஆட்சி வந்தாலும், அந்த ஆட்சியாளர்களோடு நெருங்கி விடுவார்கள் என்கின்றனர்.அதனால் தான் வருமான வரித்துறை கூட இவர்கள் பக்கமே வருவதில்லை என்கிறார்கள். அதாவது இவர்கள் என்ன கணக்கு காட்டுகிறார்கள்? அது அப்படியே சரி என்று, சரி பார்த்து விட்டு போய்விடுகிறார்களாம்.

தவிர, வருமான வரி துறைக்கு ஒழுங்கான கணக்கு காட்டி இருந்தால் காஞ்சிபுரத்தை சுற்றி ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்திருக்க முடியாது என்கிறார்கள். அது மட்டுமல்ல,

துபாய் போன்ற வெளிநாடுகளிலும்,இந்த பட்டு வியாபாரத்தை பெரிய அளவில் துவக்கி இருக்கிறார்களாம். இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க வருமானவரித்துறைக்கு லஞ்சம் கொடுக்கிறார்களா? என்பது தான் காஞ்சிபுரம் நகர மக்கள் சந்தேகம் என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *