ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், குண்டர் சட்டம் போன்ற எல்லாவற்றையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது போடப்படும் குற்ற வழக்குகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுகவிற்கு எதிராக பேசிய ஒரு குற்றத்திற்காக, பழிவாங்கும் நடவடிக்கையாக இதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றம் இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது?
காவல்துறை என்பது ஆட்சியாளர்களின் கையில் இருந்தால், அவர்கள் அவர்களின் அடிமையா? அல்லது அரசியலுக்காக இவர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வார்களா? சட்டத்தை பாதுகாக்கும் வேலையா? அல்லது இவர்களின் ஏவல் வேலையா? மக்கள் பணிக்காக தான் காவல்துறை இருந்து வருகிறது. அது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.