கிராமங்களில் நடக்கும் தவறுகளுக்கும்,ஊழல்களுக்கும், முழு பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள்,அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் – சமூக பத்திரிகையாளர்கள்.

அரசியல் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கிராமங்களில் நடக்கின்ற முறைகேடுகள் ,ஊழல்கள், எல்லாவற்றுக்கும் அந்தந்த துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் இவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஏனென்றால், இன்று கிராம ஊராட்சிகளின் நிர்வாக பிரதிநிதிகள் தான், எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டோம்? என்பது கூட தெரியாமல் ஊராட்சி மன்ற தலைவராக வருவது, விவரம் தெரியாத மக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்த பதவி என்று நினைப்பவர்களும், மேலும் அந்தந்த கிராமங்களில் உள்ள ஊர் சொத்துக்களை கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொள்வது, மற்றொரு பக்கம் தவறான கணக்குகளை எழுதி அதன் மூலம் பணம் பார்க்கும் வேலை. இவை அத்தனைக்கும் காரணம் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் .

இது தவிர ,கிராமங்களில் உள்ள ஏரிகளில் மண் எடுப்பது, ஆறுகளில் மண் எடுப்பது, கருவேல மரங்களை வெட்டுவது ,போன்ற அனைத்து ஊழலை எப்படி செய்வது ?என்று கற்றுக் கொடுப்பது அந்தந்த துறை அதிகாரிகள் தான். மேலும், இவர்களுக்கு எல்லாம் அரசியல் கட்சி என்ற ஒரு சுவர் ,என்ன தவறு பண்ணாலும் ,அது வந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் ,மற்றொன்று நாம் ஆளும் கட்சி, நாம் சொல்வது தான் சட்டம். இப்படி எல்லாம் ஒரு தவறான கணக்கு போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 இப்படிப்பட்ட தவறான கணக்குகளுக்கு விடையூர் கிராமத்தில் ஏலம் விடப்பட்ட கருவேல மரங்கள் குறித்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அதிகாரிகள் கூட ,இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் இவர்களுடைய நேர்மை. ஆனால், தலைமைச் செயலகத்தில் உள்ள துறை செயலாளர்கள் ,தலைமைச் செயலாளர் இவர்கள்தான் நடவடிக்கை எடுக்கிறார்கள் .அப்படி என்றால், இவர்கள் ,அவர்களோடு சேர்ந்து இவர்களும் பொது சொத்துக்கள் என்றால், அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள், நம் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது தான் நல்லது.

 அதற்காகத்தான் நமக்கு இந்த அதிகாரம். அவர்களுக்கு கிராம மக்கள் கொடுக்கப்பட்ட அதிகாரம். இப்படிப்பட்ட இந்த அதிகாரங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, படிக்காத மக்களை ஏமாற்றி வருகிறார்கள். விவரம் தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

குடிகாரர்களுக்கு தினமும் குடிக்க இரண்டு பாட்டில் கொடுத்தால் போதும், தினமும் ஒரு 500 பேர் வருவான் ,நம் கையில் ஊரே இருக்கிறது. கவலை இல்லை. எவன் வந்தாலும், அவனை சண்டைக்கு இழுக்கலாம். நம்மை ஒன்றும் அசைத்துக் கொடு பார்க்க முடியாது. எதனால் இவர்களுக்கு எல்லாம் இந்த நினைப்பு வருகிறது? உழைத்து சாப்பிட்டால் வராது.

 ஊர் சொத்துக்களை கொள்ளை அடித்து பங்கு போட்டுக் கொள்ளும் போது, இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு இது போன்ற கர்வம் ,ஆணவம், அகம்பாவம், எல்லாம் கிராமங்களில் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. இது பற்றி இந்த அதிகாரிகளுக்கு தெரியாது .அதிலும் பொதுக் பணித்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட ஆட்களுடன் சேர்ந்து பழம் தின்னு கொட்டை போட்டவர்கள். என்பது பொதுமக்களுக்கு தெரியாத உண்மை.

இந்த உண்மை தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு இப்போது எல்லாம் புரிந்து இருக்கும். அதனால், இந்த வனத்துறை அதிகாரிகள், இந்த ஏரிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், காட்டு பன்றிகள், காடை, கவுதாரிகள் போன்ற வனவிலங்குகளுக்கு பாதுகாத்திட  வேண்டுமென்று விடையூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *