ஜனவரி 20, 2025 • Makkal Adhikaram
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை நகராட்சிகளுடன் இணைப்பதால், கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி இந்த மக்களுக்கு 100 நாள் பறிபோவது மட்டுமல்ல, சொத்து வரி, குழாய் வரி ,கழிவுநீர் வரி, இப்படி ஏகப்பட்ட வரி சுமைகள், அந்த மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கத்திற்கு மத்திய அரசின் நிதி கோடிக்கணக்கில் வரும் என்று கணக்குப் போட்டு இதையெல்லாம் செய்கிறார்கள். பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்.
மேலும், கிராமங்களை நகரங்களாக ஆக்கி அந்த மக்களுக்கு அதனால், என்ன பயன்? அவர்களுடைய வாழ்வாதாரமோ அல்லது வருமானமோ உயரப் போவதில்லை. ஆனால், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தங்களை உயர்த்திக் கொள்வார்கள். இப்போதாவது இந்த மக்கள் உண்மையை சிந்தித்து திருந்துவார்களா?