கிராம மக்களிடம் வரி வசூல் செய்ய ஆன்லைனில் மட்டுமே கட்ட வேண்டும் என்ற சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்கள், ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதாவது சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி இப்படி எத்தனை வரிகள் இருக்கிறதோ, அத்தனை வரிகளையும் ஆன்லைன் மூலம் வசூலிக்க உத்தரவு.
ஆனால், அந்த மக்களிடம் வசூல் செய்யும் பணத்தை ,அதனுடைய கணக்கு வழக்குகள் ஆன்லைனில் எப்போது கொண்டு வரப் போகிறீர்கள் ?இதுதான் ஒட்டுமொத்த தமிழக கிராம மக்களின் மிக மிக முக்கிய பிரச்சனை .இந்த பிரச்சனைக்காக மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக எமது பத்திரிகையிலும், இணையதளத்திலும் தெரிவித்து வருகிறோம்.
ஆனால், ஊராட்சி நிர்வாகம் இன்று வரை அதற்கு எவ்வித பதிலும் இல்லை. மக்களிடம் வசூல் செய்ய மட்டும் தான் அரசாங்கம் இருக்கிறது என்றால், கணக்கு வழக்குகளை கேட்கும்போது, மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும் இருக்கிறது. அந்த கடமை அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இருவருக்குமே இருக்கிறது .
இது பற்றி யாராவது பொதுநல வழக்கு தொடர்ந்தால், இவர்களுடைய நிலமை அப்போது தெரிந்துவிடும். மேலும்,இனி இணையதளத்தில் மட்டும்தான் பணம் கட்ட முடியும் என்று ஒரு நிலையை உருவாக்கி விட்ட பிறகு, உடனடியாக அரசு உயர் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் ஆன்லைன் மூலம் வரவு- செலவு கணக்குகள், செயல் திட்டங்கள் பற்றிய அனைத்து விவரங்களும், ஆன்லைனில் எப்போது வெளியிடப் போகிறீர்கள்?