ஒரு கிராம நிர்வாக அதிகாரி ,எந்த கிராமத்தில் அவர் பணியாற்றுகிறாரோ ,அந்த கிராமத்தில் தான் அவர்கள் வசிக்க வேண்டும். அதுதான் ஜீவோ (GO) அதன்படி ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட, கிராமத்தில் தங்குவதில்லை. அவர்களை அந்த கிராம மக்கள் கேள்வியும் கேட்பதில்லை.
மேலும், கிராமத்தில் தங்கினால் ,அந்த கிராமத்தில் நடக்கின்ற தவறுகளான மணல் கடத்தல், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு ,ஏரி மரங்களை வெட்டுதல், கால்வாய் ஆக்கிரமிப்புகள், நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள், போன்ற எந்த தவறு நடந்தாலும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் உடனடியாக தெரிவிக்கலாம். மேலும் கிராமத்தில் தங்கி வேலை செய்தால், காலை 9 மணிக்கு எல்லாம் அலுவலகத்தில் இருக்கலாம் .
மேலும்,அந்த கிராம மக்களுக்கு தேவையான சான்றுகள், பட்டா, சிட்டா வழங்குதல், போன்றவற்றை கொடுப்பதற்கு இவர்கள் வரும் வரை பொதுமக்கள் வந்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், கிராம நிர்வாக அதிகாரிகள் ,ஒருவர் அந்த கிராமத்தில் பத்திரப்பதிவு செய்து நிலம் வாங்கினாலோ அல்லது வீட்டு மனை வாங்கினாலோ அவர்களுக்கு உடனே பத்திர பதிவு நகல் வைத்து பட்டா வழங்கலாம். அந்த திட்டத்தை தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ளது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று.
ஆனால், இவர்கள் அதற்கும் போர்க்கடி தூக்குகிறார்களாம். நாங்கள் ஆன்லைனில் பட்டா கொடுக்க மாட்டோம் .அதில் இந்த பிரச்சனை இருக்கிறது. அந்த தவறுகள் வந்துவிடும். இந்த தவறுகள் வந்துவிடும். அடுத்தது, அது சப் டிவிஷன் பிரிக்கணும் .சப் டிவிஷன் பிரிப்பதை தவிர, மற்றவற்றை ஆன்லைனில் ஏன் பட்டா கொடுக்கக் கூடாது?
இதற்கும் பொதுமக்களை பத்து முறை அலை கழித்தால், அவர்கள் கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவார்கள். இது ஒரு காரணம். அடுத்தது ஒருவருடைய பட்டாவை மற்றவர்களுக்கு மாற்றிவிட்டால், தன் பட்டா மாறிவிட்டதே என்று நிலத்தின் சொந்தக்காரர், இவரிடம் மாத கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பார் . அப்போது கணிசமான வருவாய் பார்த்துக் கொள்ளலாம்.
இதையெல்லாம் தடுத்து, இவர்கள் மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவதாக நினைக்கவில்லை. இவர்கள் நினைப்பு எல்லாம் கட்சிக்காரர்களுக்கு எடுப்பு வேலை, மந்திரி, எம்எல்ஏக்களுக்கு கூஜா தூக்கிக்கொண்டு பொது மக்களை அலட்சியப்படுத்துவார்கள். மேலும், சம்பளம் ஒரு மடங்கு என்றால் 100 மடங்கு இவர்களுக்கு குறுக்கு வழியில் பணம் வருகிறது. அதை வைத்து உயர் அதிகாரிகளுக்கும் கப்பம் காட்டுகிறார்களா? அல்லது அமைச்சர்களுக்கு கப்பம் கட்டுகிறார்களா? என்பதுதான் பொதுமக்களுக்கு மிகப்பெரிய குழப்பம். அதனால், பொதுமக்கள் இவர்கள் மீது எந்த புகார் அனுப்பினாலும், எந்த நடவடிக்கையும் உயர் அதிகாரிகள் எடுப்பதில்லை. ஒரு சில VAO க்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள். மேலும் இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களுடைய கிராமத்திலே தங்கி அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை செய்ய வேண்டும்.
மேலும், எம்ஜிஆர் அந்த காலத்தில் கணக்குப்பிள்ளை, முன்ஷிப் தூக்கியதே அவர்கள் கிராமத்தில் வைத்தது தான் சட்டம் .ஒருவருடைய பட்டாவை மற்றவர்களுக்கு மாற்றி விடுவார்கள். அந்த அப்பாவி மக்கள் வேதனையுடன் புலம்புவார்கள். அதையெல்லாம் மாற்றுவதற்கு தான் கிராம நிர்வாக அதிகாரிகளை நியமித்தார். இப்போதும் இவர்கள் அதே நினைப்பில் தான் இருக்கிறார்கள். அந்தந்த கிராமத்தில் யார் விட்டு சொத்துகளுக்கோ, இவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இவை எல்லாம் மாற்றம் கொண்டு வர வேண்டும். இவர்கள் சட்டப்படி அந்தந்த கிராமத்தில் தங்கி வேலை செய்ய வேண்டும்.
அதேபோல் வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு கோப்புகள் சென்றாலும், அதை உடனடியாக முடித்து அனுப்புவதில்லை. முடித்த வேலையும், பொதுமக்களுக்கு உடனடியாக சென்றடைவதில்லை. அதை வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் அலட்சியம் செய்கிறார்கள். மேலும் எந்த ஒரு கிராம உதவியாளரும் தன்னுடைய சொந்த கிராமத்தில் அவர்களை பணி அமர்த்தக் கூடாது. மேலும்,இவர்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் 10 லிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் பணியமத்தப்பட வேண்டும்.அப்போதுதான் ஒழுங்காக 10 மணிக்கு வேலைக்கு வருவார்கள். அது மட்டுமல்ல ,தாலுக்கா அலுவலகங்களுக்கும், விஏஓ வுக்கும் இவர்கள்தான் மீடியேட்டர் வேலை பார்க்கிறார்கள்.
இதனால் தான் எந்த ஒரு பொது மக்களின் பட்டா மாற்றம், சான்றுகள் மற்றும் பெயர் மாற்றம், போன்ற எதுவானாலும், பணம் கொடுக்காமல் வேலை செய்வதில்லை. பணம் கொடுத்தால் தான் முடித்துக் கொடுப்பார்கள் .பணம் கொடுத்தால்தான் நிலத்தை அளக்க வருவார்கள் .இந்த நிலை மாற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அது மட்டுமல்ல, ஒருவருடைய நிலத்தை அளந்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கிராமத்தில் ஒரு விவசாயி எத்தனை முறை இவர்களிடம் நடக்க வேண்டும்? அது பற்றி கிராம மக்களிடம் ஆய்வு செய்து அரசே தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு :
காங்கிரஸ் எம்பி ஆனா ராகுல் காந்தி இரண்டு வருடம் வழக்கு நிலுவையில் இருந்து தற்போது இரண்டு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார் இவர்கள் எங்கு சென்றாலும் தவறான தகவல்கள் அல்லது பொதுமக்களை அலைகழிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால் இவர்கள் தப்பிக்க முடியாது இவர்களை மாவட்ட ஆட்சியர் அல்ல தமிழக முதல்வர் நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது.
ஏனென்றால் அரசு ஊதியம் பெற்று தவறான தகவல்களை தருவது, அவர்களை அலைகழிப்பது, அலட்சியம் செய்வது, இது எல்லாம் அப்பாவி ஜனங்களிடம் விளையாட்டாக செய்து கொண்டிருக்கிறார்கள். விவரம் அறிந்தவர்கள், சட்டத்தின் சாட்டையை கையில் எடுத்தால், வேலை போவது மட்டுமல்ல, ஜெயிலுக்கும் போவார்கள். அதனால், இவர்கள் தங்களை திருத்திக் கொள்வது நல்லது.