ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளித்தனா்.
இதில் பெருந்துறை வட்டாரம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சை பாலத்தொழுவு, வசந்தம் நகரைச் சோ்ந்த மக்கள், தங்கள் பகுதிக்கு தாா் சாலை அமைக்கப்படாததை கண்டித்து குடும்ப அட்டைகள், ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வந்தனா்.மேலும்
அப்போது, கடந்த 2016-ஆம் ஆண்டு பெரும்பள்ளம் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, அப்பகுதியில் வசித்து வந்த 150 குடும்பத்தினருக்குவசந்தம் நகரில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இப்பகுதிக்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், வாகனங்கள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் போன்ற எந்த வாகனமும் உள்ளே வர முடியாத நிலை உள்ளது.தாா் சாலை அமைக்கக் கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட பகுதியில் வாழும் சூழல் இல்லாததால் அரசு வழங்கிய ஆதாா் அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனா்.மேலும்,அரசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை: