சிறிய வயதிலேயே கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் வரை சுமார் 497 கிலோமீட்டர் தூரம் மதுரையில் சாகச பயணம் செய்த சிறுவர் சிறுமி மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்
மேலும் ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் மானவ் சுப்ரமணியம் மற்றும் சிறுமி சுபத்ரா சந்திரகாந்தா ஆகியோரும், இதே போல பிரியதர்ஷினி ரங்கநாதன், மற்றும் சுவாதி விக்னேஷ்வரி ஆகிய இரு பெண்களும் அவர்களது பயிற்சியாளர் கவுதமன் மேவாணி வெற்றி கண்ணன் ஆகிய ஐந்து பேர் இணைந்து கன்னியாகுமரியில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரை சுமார் 497 கிலோ மீட்டர் தூரத்தை குதிரையில் சாகச பயணமாக வந்துள்ளனர்.
இந்த சாகச பயணத்தை பதினோரு நாட்களாக மேற்கொண்ட ஐந்து பேரும் இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.இந்நலையில் குதிரையில் சாகச பயணம் செய்த ஐவருக்கும் கோவை இண்டிஜினியஸ் ஹார்ஸ் சொசைட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் செய்தியாளர்களிடம் சிறுவன் மானவ் சுப்ரமணியம் மற்றும் சிறுமி சுபத்ரா ஆகியோர் பேசினர்.. சிறு வயதில் இருந்தே குதிரை சவாரி பயிற்சி எடுத்து வருவதாகவும்,இதில் புதிய சாதனை படைக்க விரும்பியதால் இந்த சாகச பயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தனர்..இந்த நிகழ்ச்சியில் குதிரை ஆர்வலர்கள், பந்தய வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.