செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram
வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயக நாட்டில் எஜமானர்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் இங்கே கேவலப்படுத்துகிறார்கள். ஓட்டுக்கு மட்டுமே 100 முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளும் சரி ,அவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அதை முன்னிலைப்படுத்தி இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.காரணம் வியாபாரம் மட்டுமே அதன் நோக்கம்.
மக்களை விடவும், சமூக நோக்கத்தை விடவும், இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்திக் கொண்டிருப்பது, சமூக நோக்கமற்ற செயல். இப்படிதான் நடிப்பேன், பேசுவேன் அதை எல்லாம் மக்களிடம் உயர்வாகவும், உண்மையாகவும் காட்டிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்று வேலை. சமீபத்தில் நிர்மலா சீதாராமன் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு ஓட்டல் அதிபர் கேள்வி கேட்டதற்கு, அவரை மீண்டும் சந்திக்க வைத்து, அவரிடம் மன்னிப்பு கேட்க வைத்து, அதையும் இந்த ஊடகங்கள் செய்தி என்று விளம்பரப் படுத்தி இருக்கிறது.
ஒருவர் தன்னுடைய பிரச்சனைகளை அல்லது குறைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம் முறையிடுவதற்கு அதிகாரம் உள்ளது. அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாங்கமாக இருந்தாலும் சரி, அந்த வகையில் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் அமைச்சர்களாக இருந்தாலும் சரி ,அதிகாரிகளாக இருந்தாலும் சரி இங்கே அவரை கேள்வி கேட்டதற்கு மன்னிப்பு கேட்க வைத்து விட்டார்கள். இது என்ன ராஜாக்களின் ஆட்சியா? இல்லை மக்களாட்சியா?
இந்த விஷயத்தை ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பில்லை கொடுக்கும்போது பல ஓட்டல்களில் இந்த கேள்வியை நானே கேட்டிருக்கிறேன். 5% ஹோட்டல்களில் போடுவார்கள். எதற்கு நாங்கள்5% கொடுக்க வேண்டும்? நீ கட்ட வேண்டிய வரி ,சாப்பிட்டு விட்டு நாங்கள் வரி கட்ட வேண்டுமா? பூவிருந்தவல்லி ஹோட்டலில் இந்த கேள்வியை கேட்டு உள்ளேன். ஹோட்டல் உரிமையாளர் லாபத்தில் வரி கட்டலாம், சாப்பிட்டவருக்கு என்ன லாபம்? அவருடைய பணம் தான் விரயம்.
மேலும், எதை பேசினாலும், அதை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பது பத்திரிக்கை வேலை அல்ல அது புரோக்கர் வேலை.தவிர, ஒரு கட்சியினர் அல்லது ஒரு கட்சித் தலைவர் இன்னொரு கட்சியினர் பற்றியும் விமர்சித்துக் கொண்டு ,இதுதான் அரசியல் என்று இந்த ஊடகங்களில் ஏமாற்றிக் கொண்டிருப்பது ஊழல்வாதிகளை நாட்டில் ஊக்குவிக்கும் வேலை . இதைதான் இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் நான்காவது தூணாக தங்களை சொல்லிக் கொண்டிருக்கிறது . இதை சமூக ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள் விமர்சனம் செய்கிறார்கள்.மேலும்,
நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய பத்திரிக்கை துறைக்கு எது உண்மை? எது பொய்? எது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்? எது சேர்க்கக்கூடாது?இதுதான் நான்காவது தூணா? ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர், எவ்வளவு பொய்களை சொன்னாலும், அதை எல்லாம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பது, இவையெல்லாம் சர்குலேஷன் என்று காட்டிக் கொண்டிருப்பது, மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் இந்த சர்குலேஷன் காட்டி வீணடித்துக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகளாலும், மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவாலும் பதில் சொல்ல முடியுமா? இப்போதாவது சமூக நலன் பத்திரிகைகளுக்கும், இதற்கும் அர்த்தம் புரிந்ததா? இல்லை புரியவில்லையா?
மேலும் பல பொய்களை அரசு விளம்பரத்திற்காக கடந்த எடப்பாடி ஆட்சியில் வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்று செய்திகளை விளம்பரங்களை போட்டுக் கொண்டிருந்த தினசரி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வியாபார திறமை .
இப்படி அதிமுக வந்தால் அதற்கு தகுந்தார் போல், அவர்கள் சொல்வதெல்லாம் செய்தி. திமுக ஆட்சி வந்தால் அவர்கள் எப்படி பேசினாலும், அதுவும் செய்தி. அப்படி என்றால் இது என்ன நான்காவது தூண்? இதற்கு அர்த்தம் சொல்லிவிட்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சர்குலேஷனை பற்றி முடிவு செய்யுங்கள். ஏற்கனவே, உங்களுக்கு இது போன்ற செய்திகளை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இதையும் அனுப்பி வைக்கிறேன். படித்து தெரிந்து கொள்ளுங்கள். நாட்டில் பத்திரிக்கை என்பது மக்களுக்காக மட்டும் தான் அதன் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால், இங்கே அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முக்கியத்துவம் ஆக இருக்கிறார்கள். இது ஏனென்றால், அப்போதுதான் இந்த பத்திரிகை வியாபாரத்தை கோடிக் கணக்கில் நடத்த முடியும் . மக்கள் ஏமாளிகளாக ஆக இருக்கும் வரை, இது போன்ற செய்திகளை இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் உங்களுக்கு காட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். ஏனென்றால் இன்றைய அரசியல் தெரியாத முட்டாள்களையும், குடிகாரர்களையும் வைத்து தான் அரசியல் தமிழ்நாட்டில் நிர்ணயிக்கப்படுகிறது.
அதாவது ஒரு கிராமத்திலோ, ஒரு நகரத்திலோ எந்த வாடில் யார், யார் குடிகாரன்? யார், யார் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பார்கள்? அந்த பட்டியலை எடுத்து வைத்து, இரண்டு அரசியல் கட்சிகளும் அரசியல் செய்து வருகிறது. இதில் இந்த பணம் கொடுக்கும் கட்சி புரோக்கர்கள், இங்கே அவரவர்க்கு தகுந்தார் போல் பேசி, அந்த ஓட்டுக்களை எல்லாம் வாங்கி கொடுக்கும் வேலை, இவர்கள் வேலை.
மேலும்,கட்சிக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொண்டால் உடனே சண்டைக்கு போய் வெட்டுவதும் குத்துவதும் அடிப்பதும் இதுதான் இந்த அடியாட்களின் அரசியல். இவர்களை வைத்து நாட்டு மக்கள் அரசியல் என்று நம்பிக் கொண்டிருந்தால் மக்கள் ஏமாறுவார்கள். அவர்கள் புத்திசாலியாக பதவிக்கு வந்து பொது சொத்துக்களை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் மிரட்டி கொண்டிருப்பார்கள். இதுதான் தமிழ்நாட்டு அரசியல் 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட அரசியலுக்கு முட்டு கொடுக்கும் வேலைதான், இன்றைய கார்ப்பரேட் ஊடகத்தின் நான்காவது தூண் வேலை. மேலும், தேர்தல் என்று வந்துவிட்டால், அவர்களுடைய பேச்சுக்களை ஒன்று விடாமல் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் காட்ட ஒரு தொகுதிக்கு ஒரு கட்சியிடம் அல்லது கட்சி வேட்பாளரிடம் இவ்வளவு தொகை என்று நினைத்து வாங்கிக் கொள்வார்கள். இதில் அவர் எவ்வளவு பொய் சொன்னாலும், அது தேர்தல் அறிக்கை தான் .அது உள்ளாட்சியாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், இது எல்லாம் மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாது. ஏன் தற்போதைய சிறிய பத்திரிகைகள் நடத்துபவர்களுக்கு கூட தெரியுமா? அல்லது இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளில் வேலை செய்யக்கூடிய செய்தியாளர்களுக்கு அது தெரியுமா? என்பதை யாருக்கு தெரியும்?மேலும்,
தேர்தல் என்று வந்தால் குடிகாரர்களுக்கு சந்தோஷம்தான், எல்லா கட்சிக்காரர்களும், இந்த மது பாட்டில்களை வாங்கி கொடுப்பார்கள். குடிகாரர்களுக்கு வீட்டைப் பற்றியும் கவலை இல்லை. நாட்டைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால் போதை பற்றி மட்டும் தான் கவலை. இப்படிப்பட்ட மக்களிடம் விலைமதிப்பற்ற ஓட்டுக்களை கொடுத்துவிட்டு சென்றது அம்பேத்கரின் சட்டம். அந்த சட்டம் கூட அவர் கடைசியாக ஒரு வரி எழுதி வைத்துவிட்டு சென்றதாக தகவல்.
இந்த சட்டங்கள் என்னுடைய காலத்தில் வாழ்கின்ற ஜெனரேஷனுக்கு அவர்களுக்கு மட்டும்தான் இது பொருந்தும் .அடுத்து வர தலைமுறைகளுக்கு தகுந்தார் போல் இந்த சட்டங்களை மாற்றலாம் என்று தான் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த சட்டங்களை மாற்றக்கூடாது என்று இந்த ஊழல் அரசியல்வாதிகளும், ஊழல் அரசியல் கட்சிகளும் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதுதான் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி,திருமாவளவன் ,மு க ஸ்டாலின் போன்றோர் சொல்லும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வேலை.
இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத தேர்தல் ஆணையம் தேர்தல் என்பது ஒரு ஃபார்மாலிட்டி. ஊழல் வாதியாக இருந்தாலும், தவறு பண்ணவராக இருந்தாலும்,சமூக குற்றவாளியாக இருந்தாலும், மீண்டும் தேர்தலில் நிற்க அனுமதி. இது என்ன சட்டம்? அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட ஊழல்வாதிகள், ரவுடிகள் அரசியலில் இல்லை. இப்போது அவர்கள் தான் அரசியலில் இருக்கிறார்கள். அதனால், அதற்கேற்றார் போல் சட்டத்தை மாற்று இதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி? அதே போல் பத்திரிக்கை சட்டங்களை மாற்று இதுதான் சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வி?