மே 10, 2024 • Makkal Adhikaram
நாட்டில் மக்களுக்கு சட்டப் பாதுகாப்பை கொடுக்க வேண்டிய காவல்துறை சவுக்கு சங்கர் கைது விஷயத்தில் சட்டத்தை அவர்களே கையில் எடுத்துக் கொண்டார்களா? என்ற கேள்வி அவருடைய கையில் போடப்பட்டுள்ள கட்டு தெரியவந்துள்ளது .ஒரு மனிதன் எந்த தவறு செய்தாலும், அவனுக்கு சட்டப்படி நீதிமன்றம் தான் தண்டனை வழங்க முடியும். ஆனால், இங்கே காவல்துறையே சட்டத்தை கையில் எடுத்துள்ளதா?. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி என்றால், நீதிமன்றம் எதற்கு உள்ளது? என்பதை காவல்துறை தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் கைது செய்யும் போது நீதிமன்றத்தின் சட்ட விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? அப்படி கடைபிடிக்காத காவல்துறைக்கு, நீதிமன்றம் எந்த தண்டனையும் விதிக்கவில்லை என்றால், அவர் சட்டத்தை மீறிய குற்றத்திற்கு நீதிமன்றம், காவல்துறை இந்த விஷயத்தில் தவறு செய்கிறதா? மேலும் ,ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால், அவருக்கு ஒரு விதமாக காவல்துறை வேலை செய்கிறது.
ஆனால், சாமானிய மக்களோ அல்லது சவுக்கு சங்கர் போன்ற ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசினால், அவரை பழி வாங்கும் விதத்தில் காவல்துறையின் நடவடிக்கை இருக்கிறதா? தவிர,சவுக்கு சங்கர் கைது செய்து போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது, எப்படி கையில் கட்டு வரும் ? அப்படி என்றால் போலீஸ் அவருடைய கையை அடித்து, ஒடித்தார்களா ? எதற்காக கையில் கட்டு வந்தது? மேலும், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகளுகாக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சவுக்கு சங்கர் ஒரு சாதாரண youtube பேச்சாளர் அவர் பேசியது ஒரு குற்றம் என்று காவல்துறை அவருடைய கையில் கட்டு போடும் அளவிற்கு அடித்து விட்டார்களா? இதை உச்சநீதிமன்றம் தான் கேள்வி எழுப்ப வேண்டும்.
மேலும், காவல்துறையின் உயர் அதிகாரி பற்றி தவறாக பேசினார் என்று அவருடைய கையை உடைத்து இருக்கிறார்களா? அப்படி என்றால் காவல்துறை சட்டத்தை கையிலே எடுத்துள்ள ஆயுதமா? இவர் ஒரு கிரிமினலாக இருந்தால் கூட பரவாயில்லை. அல்லது சண்டை போடும் ரவுடியாக இருந்தா கூட பரவாயில்லை. ஒரு சாதாரண youtube பேச்சாளர் பேசிய குற்றத்திற்காக அவருடைய கையை உடைத்து இருக்கிறார்கள் என்றால், காவல்துறைக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது இவர்களே சட்டத்தை கையில் எடுத்து விட்டார்களா? அப்படி கையில் எடுத்தால் இவர்களுக்கும், ரவுடிகளுக்கும் என்ன வித்தியாசம்? ரவுடிகள் யார் பணம் கொடுத்தாலும் அடிப்பான் .
இவர்கள் ஆட்சியாளர்கள் பதவியில் உள்ளவர்கள் சொன்னால் அடிப்பார்களா ? காவல்துறை, நீதித்துறை, பத்திரிக்கைத்துறை மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் இருந்தால் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு மக்கள் போராடிக் கொண்டிருப்பார்கள்?
இப்படிப்பட்ட பொறுப்பு மிக்க கடமையை காவல்துறை அதிகாரிகள் சுயநலத்திற்காக பொதுநலத்தை மறந்து விடுகிறார்கள் . நாட்டில் பெரிய கிரிமினல் குற்றவாளியை காவல்துறை கைது செய்து விட்ட நினைப்பா ?
அதனால்,இந்து முன்னணி போன்ற அமைப்புகள், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சமூக ஆர்வலர்கள் , தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளன.