தமிழ்நாட்டில் இன்று 99 சதவீதம் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் உண்டியல் பணம் தவறான முறையில் கையாளப்படுவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளை கோயில்களில் தக்கர்களாக நியமிப்பது தான் மிகப்பெரிய அரசாங்கம் செய்கின்ற தவறு.
இதை ஏற்கனவே மக்கள் அதிகாரம் பத்திரிகையில் சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியிட்டுள்ளோம். ஆனால் தற்போது நீதிமன்றம் இதற்கு ஒரு பரிகாரத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. கோயில் பணி என்பது புனிதமான நபர்கள் செய்ய வேண்டிய பணி .அந்த பணியை செய்ய அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை. இவர்கள் நோக்கம் எல்லாம் கடவுளையும் பணத்திற்காக விலை பேசி விற்று விடுவார்கள்.
.jpg)
அதனால்தான் ,தமிழ்நாட்டில் பல கோடிக்கணக்கான விக்கிரகங்கள் வெளிநாடுகளில் விற்பனையாகி மறுபடியும் இங்கே கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி மத்திய அரசு எடுத்து அதை செய்துள்ளது .
.jpg)
மேலும், கோயில்களை நிர்வாகிப்பதற்கு ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தான் அதற்கு தகுதியானவர்கள். இவர்கள் அரசியலில் கொள்ளை அடிப்பது போல், கோயில் சொத்துக்களையும் ,கொள்ளையடிப்பதற்கு தான் தகுதியானவர்கள்.

இவர்களுடன் கோயில் நிர்வாக அதிகாரிகளும் ,கைகோர்த்துக் கொண்டால் அந்த கோயில் சொத்துக்கள் இருக்கும் இடம் காணாமல் போய்விடுகிறது. பிறகு ,அதை நீதிமன்றத்தில் தான் எங்கே இருக்கின்றது? என்பதை ஒவ்வொன்றாக தேட வேண்டி வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால், கோயில் நிர்வாகம் முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மட்டுமே அதற்கு தகுதியானவர்கள் .
%20(1)%20(1).jpg)
மேலும் பொதுமக்களும் அதை தான் விரும்புகின்றனர்.