கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா

நாமக்கல் மாவட்டம் :
நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநில தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் அவா்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய முடிவதில்லை.

தொழிலாளா் நலத் துறை முதன்மை செயலாளா் அறிவுரைப்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளா்கள் தங்களதுபண்ணைகளில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை பணியமா்த்தும்போது அவா்களது அடையாள அட்டை தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு பணியமா்த்த வேண்டும். மேலும், அந்த விவரங்களை தொழிலாளா் நலத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகே அவா்களை பணியமா்த்த வேண்டும்.

தற்போது பணிபுரிந்து வரும் அனைத்து வெளி மாநில தொழிலாளா்களின் விவரங்களையும் எந்தவித விடுதலுமின்றி முழுமையாக பதிவேற்றம் செய்திட வேண்டும். மேலும், இந்த விவரத்தினை நாமக்கல் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, தொழிலாளா் உதவி ஆய்வாளா்களை, நாமக்கல் – 88380-40453 (நாமக்கல், பரமத்திவேலூா், மோகனூா் வட்டம்), ராசிபுரம் – 90424-88228 (ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம் வட்டம்), திருச்செங்கோடு வட்டம் -93445-84351, சங்ககிரி – 88836-33363 (குமாரபாளையம், சங்ககிரி வட்டம்) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *