சட்டத்தின்படி உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடிக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது – பொதுமக்கள் வரவேற்பு .

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஒருவர் பதவியில் இருக்கும் போது தன் பதவி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்து குவித்தால் (Prevention of corruption act) பிரிவென்சன் ஆப் கரப்ஷன் ஆக்ட் படி அவர் மீது நடவடிக்கை பாயும் .

அப்படிதான் 2006 ல் திமுக அமைச்சராக இருந்த பொன்முடி கனிமவளத் துறையில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.75 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது .இந்த வழக்கை விசாரணை செய்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சி ஆகிய வரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

 ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் விழுப்புரம் நீதிமன்றத்தின், நீதிபதியின் வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்து, தீர்ப்பை  ரத்து செய்தது. இதனால் இவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. எம் எல் ஏ பதவி பறிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியும் விரைவில் ராஜினாமா செய்யப்படுவார் .மேலும், பதவி பறிக்கப்பட்ட உடன் அவருடைய காரிலிருந்து கொடி அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது .

மேலும், இது சம்பந்தமாக நாளை தீர்ப்பு வழங்கப்படும் போது சிறை தண்டனை உறுதி என்பதும் வெளியாகி உள்ள தகவல் . இந்த வழக்கில் பொன்முடிக்கு ஆஜரான வழக்கறிஞர் சார்பில் பொன்முடிமனைவிக்கு 110 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அவர் வர்த்தகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இவற்றை புலன்விசாரணை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.இது தவிர, அவர் குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது .அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவு செய்த நீதிமன்றம், எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இவை அனைத்தையும் நீதிபதி எம் ஜெயச்சந்திரன் ஆய்வு செய்து கீழமை நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, நீதிபதி எம். ஜெயச்சந்திரன் பொன் முடியும், அவரது மனைவி  விசாலாட்சியும் 64. 90℅ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிருபனம் ஆகியுள்ளது என்று நீதிபதி எம் ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இப்படி உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பதவி அதிகாரத்தை பயன்படுத்தி ,சொத்து சேர்க்கும்  வேலைகளை செய்பவர்கள் மீது சட்டத்தின் நடவடிக்கை தொடங்கி இருப்பது ,பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 மேலும், இதுபோன்று நீதிமன்றங்கள் சட்டத்தின் மாண்பை காப்பாற்றும் போது, மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை நிச்சயம் மாறாது என்பது உறுதி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *