இன்றைய அரசியல் என்பது அரசியல் கட்சி தலைவர்கள் + நானும் எனது தொண்டர்கள் என்ற கட்சி புரோக்கர்கள் பங்கு பிரிக்கும் வேலையே இன்றைய அரசியல். இவர்களுக்கு அரசியல் என்றால் பொதுநலமா? அல்லது சுயநலமா? என்று கூட தெரியாது. தெரிந்ததெல்லாம் கிராமங்களில் , நகரங்களில்,அவர்களுடைய பெயருடன் பேனர்களிலும், வால்போஸ்டர்களிலும் ,கட்சித் தலைவர் உடைய போட்டோவுடன் அந்தப் பகுதி மக்களுக்கு காண்பிப்பது, இது தவிர இவர்கள்ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று கூட்டம் கூடி மக்களுக்காக பேசுவது போல், நடிப்பார்கள். யார் நன்றாக பேசி நடிக்ரார்களோ, அவர்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பார்கள்.
தேர்தல் வந்தால் பிரியாணி, மது பாட்டில்கள் இலவச மாக கிடைக்கும். ஓட்டுக்கு பணம் கிடைக்கும். அதற்கு அவர், அவர் கட்சி யினரே இந்த புரோக்கர் வேலை செய்யும் தொழில் ஆக்கி விட்டார்கள். இவர்களுக்கு எந்த கொள்கை யும் கிடையாது. கொள்கை எல்லாம் வாய் வார்த்தை களில் பேசி விட்டு போவார்கள். இது தவிர, தலைவன் பேசினால் கை தட்டி விசில் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவன் தொண்டனுக்கு லாயக்கு இல்லை. இதையெல்லாம் இன்றைய பத்திரிகை நிருபர்கள் வீடியோ எடுத்து,போட்டோ பிடித்து, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் முக்கிய செய்திகளாக காட்டி க் கொண்டிருப்பார்கள்.
இந்த வெறும் விளம்பர ஊடாக ங்களை மக்களும் பெரிய ஊடாக ங்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சி யாளர் கள் செய்யும் ஊழலில் இவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஏனெனில் ,அவர்கள் என்ன தவறு செய்தாலும், அவர்களை நல்லவர்களாக மக்களிடம் காட்டி ,மக்களை முட்டாளாக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதால், இவர்களுக்கும் இந்த ஊழலில் பங்கு உண்டு.
காரணம் இருவருக்குள், ஒரு பரஸ்பர ரகசிய உறவு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் தான், செய்தித் துறை இவர்கள் என்ன சொன்னாலும், சட்டத்தை அதற்கேற்றவாறு தமிழ்நாட்டில் மாற்றி இருக்கிறார்கள். அதாவது சாமானிய மக்களின் பத்திரிகைகளுக்கு மாத பத்திரிக்கையானால் பத்தாயிரம் பிரிதிகளை அச்சடிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு அரசின் அடையாள அட்டை கொடுக்க வேண்டும்.
அதேபோல், இவர்கள் தமிழகம் முழுதும் எத்தனை இடங்களில் ஏஜென்ட்கள் வைத்திருக்கிறார்கள் ?எவ்வளவு விற்பனை ?வரவு செலவு கணக்கு? 3 ஆண்டுகளுக்கு ஐடி பைல் செய்திருக்க வேண்டும். இது போன்ற கடினமான சட்டங்கள் இந்த சாமானிய பத்திரிகைகளுக்கு அரசியல், அதிகாரத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது .இது இந்த பத்திரிகைகளை பழிவாங்கும் வேலை என்றுதான் நான் சொல்வேன். மேலும், இவர்கள் மட்டுமே அரசாங்கத்தின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை வாங்கிக் கொண்டு ,அரசியல் கட்சியினரும், ஆட்சியாளர்களும் என்ன சொல்கிறார்களோ ,அந்த செய்திகளை எல்லாம் போட்டுக்கொண்டு, மக்களை ஏமாற்றும் தொழில் தான் இன்றைய கார்ப்பரேட் ஊடகங்களின் செய்திகள்.
அதாவது ஆள்ஆளுக்கு ஒரு கருத்து சொல்வது போல், இவர்களும் செய்திகளை தங்கள் சுயநலத்துக்காக வெளியிடுவார்கள் . மேலும் ,அரசியலில் நேர்மை, கௌரவம், தகுதி ,மனசாட்சி எதுவும் இல்லாமல் ,கூட்டத்தை யும் வெத்து பேச்சுகளையும் நம்பி ஏமாறுவது மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய காரணம். அது மட்டுமல்ல, அரசியல் பொதுநலமில்லாமல் சுயநலத்தின் அடிப்படையில் வந்து விட்டது .
இதில் வாயிலே பேசுவது சுலபம் .ஆனால் செய்வதுதான் எல்லோருக்கும் கடினமான வேலை .அதிலும், அரசியல் என்பது மிகவும் கடினமான வேலை.இதற்கு மனம் ஈடுபாடோடு அந்த கடினமான தியாகத்தை செய்வதற்கு தகுதியானவர்கள் யார்? என்பது கூட நிர்ணயிக்க தெரியாமல் தான் ,இன்றைய வாக்காளர்கள், ஜாதி, மதத்தை பார்த்து , அரசியல் செய்தால், அது சரியா? வருமா? எல்லா ஜாதியிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். எல்லா மதத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். எல்லா அரசியல் கட்சியிலும், குறைந்த சதவீதம் நல்லவர்கள் இருக்கிறார்கள் .
ஆனால், இவர்களை மக்கள் தேர்வு செய்வதை இல்லை என்று கூட ஒரு அதிகாரி என்னிடம் பேசினார். அவருடைய கிராமத்தில் இரண்டு சமூக ஆர்வலர்கள் உள்ளாட்சி தேர்தலில் நிற்கிறார்கள் .அவர்களுக்கு யாரும் வாக்களிக்கவில்லை. அவர்கள் பொதுப் பிரச்சனைகளுக்கு ஓடி ஓடி செய்வார்களாம். ஆனால், அவர் வாங்கிய ஓட்டு 187 ஓட்டு தான். ஆனால், திமுக கட்சியின் ரவுடிசம் செய்யக்கூடிய ஒருவர் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது இந்த மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாதது தான் முக்கிய பிரச்சனை.
தேர்தல் ஆணையம் தேர்தல் என்பது கடமைக்கு தேர்தல் நடத்திவிட்டு செல்கிறார்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பது கூட தேர்தல் ஆணையத்திற்கு தேவையில்லை. ஏதோ, ஒரு சின்னத்தை ஒரு நபர் போய் அழுத்தி விட்டு வரலாம் .அது யார் போனால் என்ன? அந்த பட்டனை அழுத்துவதற்கு தான், தன்னுடைய வாக்கு, அந்த வாக்கு பணம் வாங்கிக் கொண்டு செலுத்தினாரா? அல்லது பணம் வாங்காமல் செலுத்தினாரா? இது தவிர, இவர் தகுதியானவருக்கு வாக்களித்தார? எதுவும் தேவையில்லை. அதனால் தான், அரசியலில் ஊழல் என்பது புரையோடி விட்டது.
இந்த ஊழல்வாதிகளுக்கு சட்டத்தில் உள்ள ஓட்டைக்குள் புகுந்து, வெளியே வந்து விடுகிறார்கள். இவர்களுக்கு கடுமையான சட்டம் கொண்டு வரவில்லை. இவர் மீது வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு வருட கணக்கில் வாய்தா கொடுத்து இவரை காப்பாற்றுவதற்கு நீதிமன்றங்கள் கம்பளம் விரித்து நாட்களை நகர்த்துகிறது. சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் .இன்று கூட உச்சநீதிமன்ற நீதிபதி சொல்லும் போது எங்களைப் போன்ற சமூக அலுவலர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.
இன்று வரை அம்பேத்கரின் சட்டம் அந்த காலத்திற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். இந்த காலத்திற்கு அந்த சட்டம் நிச்சயம் பொருந்தாது. அது மனசாட்சி உள்ள மக்களுக்கு அந்த சட்டம் பொருந்தும். இங்கு மனசாட்சி என்றால் என்ன? என்று தெரியாதவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது .அதனால், அரசியலில், அரசியல் கட்சிகளில், பதவி,அதிகாரத்திற்கு வந்தவர்களுக்காக நாட்டில் தனியான ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தகுதியற்றவர்கள், இதிலிருந்து ஒதுங்கிக் கொள்வார்கள்.
அடுத்தது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அவசியம். ஏனென்றால் அரசியல் என்றால் என்ன ? எதற்காக வாக்களிக்கிறோம்? அவர் யார்? எப்படிப்பட்டவர்? இவர் சமூகப் பணியில் ஈடுபட்டவரா? அல்லது ஈடுபடாதவரா? தவிர ,பொது சொத்துக்களை ஏமாற்ற தெரிந்தவரா? சுயநலமிக்கவரா? பொதுநலனில் அக்கறை கொண்டவரா ?இதுவரை, இவர் அந்த பகுதியில் செய்தது என்ன? நல்லதா ?கெட்டதா? இவருடைய குடும்ப வாழ்க்கை என்ன? இவ்வளவும் பொதுமக்கள் என்கிற வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்கும் போது, எத்தனை பேர் அந்தப் பகுதியில் ஓட்டு கேட்டு வந்தாலும், இவ்வளவு கேள்விக்கும் விடை தெரிந்து, அதற்கு மனசாட்சியுடன் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற வாக்களிப்பவர்களுக்கு தகுதி இருக்கிறதா? மேலும்,
இதையெல்லாம் தேர்தல் ஆணையம் மக்களிடம் ஒவ்வொரு வேட்பாளர்கள் பற்றியும் கொண்டு சென்று, வாக்காளர்களுக்கு தேர்தல் பற்றியும்,வேட்பாளர்களை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால், நாட்டின் நிர்வாகம் ,அந்தப் பகுதியின் நிர்வாகம் அல்லது அந்தத் தொகுதியின் நிர்வாகம், எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஒரு பொறுப்பின் மக்கள் பிரதிநிதியாக அவருக்கு வாக்களித்து ,தேர்வு செய்கிறார்கள். அப்படி தேர்வு செய்யும்போது ,எந்த நம்பிக்கையுடன் மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்களோ, அந்த நம்பிக்கையை வீணடித்து விடுகிறார்கள். அதாவது வாக்களித்த மக்களுக்கு, நம்பிக்கை துரோகம் செய்து விடுகிறார்கள் .அதனால் அரசியல் என்பது ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது.அந்த ஏமாற்றத்திற்கு முக்கிய காரணம் ,அரசியல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஓட்டுக்கு பணம் வாங்குவது ,இது இரண்டும் ஜனநாயகத்திற்கு எதிரானது.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அதாவது வாக்காளர்களுக்கு இந்த பணம் பட்டுவாடா செய்வதற்கு ஒவ்வொரு கட்சியிலும், கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், அந்தந்த கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் மக்களுக்கு, அதாவது வாக்காளர்களுக்கு புரோக்கர் வேலை செய்கிறார்கள். இந்த புரோக்கர்கள் மூலமாகத்தான் அந்தந்த பகுதியில் யாரார் நம்முடைய கட்சிக்காரர் அவர்களுக்கு பணம் கொடுங்கள் என்று இவர்கள் தான் ரெகமெண்டேஷன் செய்வார்கள் .
எனவே, ஓட்டுக்கு பணத்தை வாங்குவதும் தவறு, பணத்தை கொடுப்பதும் தவறு. அதனால் தான் தன்னுடைய வாக்கு யாருக்கு? எப்படிப்பட்டவருக்கு செலுத்த வேண்டும் ?என்ற விழிப்புணர்வு இல்லாமல் ஏமாந்து கொண்டிருக்கும், இந்த மக்களுக்கு அரசியல் என்பது இறுதிவரை ஏமாற்றம் ஆகத்தான் இருக்கும். இந்த அரசியல் சிஸ்டம் மாற்றக் கூடிய கடும் சட்டங்கள் கொண்டு வராமல் இருக்கும் வரை ,சாமான்ய மக்களுக்கு அரசியல் ஏமாற்றம் தான். இந்த மாற்றத்தை நரேந்திர மோடி கொண்டு வருவாரா? பொறுத்திருந்து பார்ப்போம் -மக்கள் நலனில் மக்கள் அதிகாரம் .