சட்டமன்றத்தில் நடைபெற்ற தேசிய கீத போராட்டத்தில் திமுகவின் அரசின் வலிமையா? அல்லது மத்திய அரசின் வலிமையா? அல்லது இது இருவருடைய ஈகோவா? – தமிழக மக்கள்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக அரசை எதிர்த்து ஒரு கவர்னர் ஆர். என். ரவி இருக்கிறார் என்றால்! உளவுத்துறையில் மிகப்பெரிய பொறுப்பிலிருந்த ஒரே காரணம்தான். அவரால் இவர்களை எதிர்க்க முடிகிறது.

மேலும், அவர் ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காக இப்ப பிரச்சனையை கவர்னர் எழுப்பவில்லை. கவர்னர் சட்டப்படி தேசிய கீதம் சட்டமன்றத்தில் பாட வேண்டும். என்று தான் தெரிவித்துள்ளார்.மேலும்,சட்டத்தை பாதுகாப்பது கவர்னரின் வேலை. அதைத் தான் அவர் செய்திருக்கிறார். இவர்களுக்கு சட்டமும் தெரியவில்லை. சமூகமும் தெரியவில்லை. தவிர, இந்த சீன் போடுற அரசியல் எல்லாம் ஆளுநர் ரவியிடம் வேலைக்காகாது. மேலும்,

ஏதோ ஆடு, மாடு மேய்க்கிறவர்களை வைத்து ஆட்சி நடத்துவது போல நினைத்துக் கொண்டார்களா? திமுக கட்சியினர். இப்போது எல்லாம் பேசுகின்ற இளைய தலைமுறைகள் செல்போனில் நோண்டி நொங்கெடுப்பார்கள். அரசியல் தெரியாத மக்களிடம் ஏமாற்றிக் கொண்டிருப்பது உங்களுடைய அரசியல். அடாவடி பேச்சு, கிரிமினல் பேச்சு, இதையெல்லாம் வைத்து தான் தமிழ்நாட்டில் அரசியலில் பந்தா காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால், ஒட்டுமொத்த திமுக கூட்டத்தையும் ஒரு ஆளுநர் எதிர்க்கிறார் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை.. உங்களுடைய ஆதி அந்தம் பூராவும் தோண்டி எடுத்து வைத்திருக்கிறார் கையில்,

அதனால் தான் திமுக கூட்டம் கவர்னருக்கு எதிராக இன்று போராட்டம் மாவட்டம் முழுதும் அறிவித்துள்ளது. இது உண்மையிலே கவர்னருக்கு பெருமை தான். இதுவரையில் தமிழ்நாட்டில் எந்த கவர்னருக்கும் இல்லாத ஒரு பெருமை, தனித்துவம் வெளிப்படுத்தி உள்ளார் என்பது திமுகவினர் பாடும் வசையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், திமுக இந்த விஷயத்தில் தனக்கு, தானே சூனியம் வைத்துக் கொள்ளப் போகிறது. மக்களுக்கு எதுவும் தெரியாது. இந்த ஊடகங்கள் நான் சொல்வது தான் செய்தி என்று போட்டுக் கொண்டிருப்பார்கள். எதை எப்படி பேசினாலும்,மக்கள் உண்மை என்று நம்பி விடுவார்கள் என்று நினைக்கிறீர்கள். நீங்களும் ஏமாறுவீர்கள். இந்த கார்ப்பரேட் ஊடகங்களும் ஏமாறுவார்கள்.

சோசியல் மீடியா மற்றும் எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்களில் என்ன செய்திகள் வருகிறது? என்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இப்போது எது? உண்மை, எது பொய்?என்று ஆய்வு செய்யவும் தொடங்கி விட்டார்கள்.

அதனால், டிவியில் செய்தி பார்க்கும் மக்களே குறைந்து விட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு அடைந்து இருக்கிறார்கள் . இனி திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சி வந்தாலும்,மக்களை ஊடகங்களை வைத்து ஏமாற்ற முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *