சட்டவிரோதமாக நடைபெற்று வரும் சவுடுமண், மலை மண், ஆற்று மணல், கல்குவாரிகள், போன்றவற்றை தடுக்க வேண்டும் என்றால், உடனடியாக அரசு அதை தனியாரிடம் கொடுப்பதை தவிர்த்து, அரசு ஏற்று நடத்த வேண்டும். இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க ஒரே வழி ,அரசே விற்பனை செய்ய வேண்டும்.
அப்போதுதான் பல கோடிகள் அரசு அதிகாரிகளுக்கு ,கைமாறும் லஞ்சம் அரசுக்கு வருவாயாக வரும். இது தவிர, அளவுக்கு அதிகமாக மணல் ,சவுடு மண் ,மலை மண் ,மலை கற்கள் போன்றவை வெட்டி எடுப்பது தடுக்க முடியும். இந்த தனியார் குத்தகை முறையால் தனியாரும், அரசு அதிகாரிகளும் லாபம் பார்த்து வருகின்றனர்.
இதை அரசை ஏற்று நடத்தினால், இன்னும் கூட யூனிட்டுக்கு குறைந்த ரூபாய் நிர்ணயம் செய்து, பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் ,இந்த தொழிலை அரசுக்கு வருவாய் வரக்கூடிய லாபமான தொழிலாக இதை மாற்ற முடியும். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதை நடவடிக்கை எடுத்தால், இதில் நடைபெறும் மிகப்பெரிய ஊழலை தடுக்க முடியும்.
மேலும், சட்டவிரோதமாக நடைபெற்று வரும் குவாரிகளில், எந்த விதிமுறையும் கடைப்பிடிப்பதில்லை. இதைப் பற்றி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் கண்டு கொள்வதில்லை. இப் பிரச்சனை பல ஆண்டுகளாக நீதிமன்றத்திலும், வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமாக மாவட்ட ஆட்சியர்கள், கனிம வள அதிகாரிகள் கூட்டு கொள்ளை நடவடிக்கை தான் இதில் தொடர்கிறது.
இது பற்றி மத்திய அரசு தற்போது அதிகாரிகள் மீது சட்டவிரோதமாக கனிம வளத்தை தோண்டி எடுத்தால், நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ,தனியார் குவாரி உரிமை யாளர்களுக்கு கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்க ஒத்துழைக்க முடியாது என்ற நிலைமை வந்த உடன் தான், இப்பிரச்சனை விஸ்வரூபமாக வெடித்துள்ளது.
இங்கே ஆளாளுக்கு அறிக்கைகள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெற்ற வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, தனியாரும், அதிகாரிகளும் லாபம் அடைவதை தடுக்கவும், சட்டவிரோத குவாரிகளின் விதிமுறை மீறல்கள் தடுக்கவும், ஒரே வழி அரசே இதை ஏற்று நடத்த வேண்டும் – சமூகநல ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை.