அரசியலுக்கு வந்து அரசியலில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய வேண்டும்? மக்களின் தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்கு நாதி இல்லாமல், சனாதனத்தையும், இந்து மதத்தையும் ,இந்துக்களையும் ,இழிவு படுத்தும் விதமாக அரசியல் ஆக்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது .
எந்த பேச்சால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அல்லலாம் என்று நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழப்பது உறுதி. மேலும், சனாதன தர்மத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசிவிட்டு, இப்போது நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றால், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அரசியலுக்காக எப்படி வேண்டுமானாலும் பேசி, உங்களுடைய திறமையை காட்டுவது போல சனாதன தர்மத்தில் காட்ட முடியாது.
சனாதன தர்மத்தை வெளிநாட்டினர் கூட வரவேற்கிறார்கள். சனாதனத்தில் நம்பிக்கை வைத்து மதம் மாறியவர்கள் பல கோடி பேர்.
திமுகவில் எல்லாம் தெரிந்த நினைப்பில் இருக்கின்ற முட்டாள்கள் அதிகம். இவர்கள் யாருக்கும் தெரியாது என்று பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று, அந்த காலத்தில் அதை ஏற்றுக் கொண்டார்கள். இப்போது சில தினங்களுக்கு முன் சிறுவாபுரி முருகன் கோயிலில் கிருத்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த கூட்டத்தில் பார்த்தால் அதிக அளவில் திமுக கொடியை கட்டிக்கொண்டு வந்த கார்கள் தான் அதிகம்.
அதேபோல் துர்கா ஸ்டாலின் அதிகமாக கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்திக் கொண்டு வருகிறார்கள். அமைச்சர் துரைமுருகன் வேலூர் சாமியாரே கதி என்று கிடக்கிறார். அமைச்சர் அன்பரசு எதை செய்தாலும் செங்கல்பட்டில் உள்ள ஒரு சாமியார் இடத்தில் கேட்டுவிட்டு தான் செய்கிறார். இப்படி இவர்களுடைய இரட்டை வேஷம் எத்தனை நாளைக்கு மக்களிடத்தில் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்?
உங்கள் வீட்டில் அம்மா, தங்கை, மருமகன் இவர்கள் எல்லாம் பூஜை, யாகம், கோயில் வழிபாடு, இதையெல்லாம் செய்வது இது சனாதன தர்மம் இல்லையா? அப்படி என்றால் உங்களுக்கு வேண்டுமென்றால் சனாதன தர்மத்தை கடைபிடிப்பீர்கள். அதை சாதாரண பொதுமக்கள் கடைப்பிடிக்க கூடாது. ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்டினில் சேர்ந்ததால், சனாதன தர்மம் ஒழித்து விடுவாரா?
https://www.youtube.com/shorts/uUiDWRqmMEU?t=6&feature=share
அப்படி என்றால் முதலில் உங்கள் குடும்பத்தில் சனாதன தர்மத்தை ஒழியுங்கள். உங்கள் தாத்தா எதற்காக மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டார் என்பது பற்றி தெரியுமா ?இந்த சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி பேசியதன் விளைவு உலக அளவில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்ல, எந்த அரசியலுக்காக இதை உதயநிதி ஸ்டாலின் பேசினாரோ, அதனுடைய விளைவு நிச்சயம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும் .
https://youtube.com/shorts/uUiDWRqmMEU?si=PUac__vPkuBOyrS8
இன்னொரு சனாதனத்தின் உதாரணத்தை இங்கே குறிப்பிடுகிறேன். என்னுடைய நண்பர் பார்த்திபன் மலேசியாவில் இருந்து வருகிறார். அவருடைய பூர்வீகம் தமிழ்நாடு. அவர் தந்தையை எப்படி நேசிக்கிறார் என்பதை எனக்கு வீடியோவின் மூலம் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். தெய்வத்திற்கு சமமாக அவருடைய தந்தையை நேசிக்கிறார் .இதுதான் சனாதன தர்மம்.
அவர் தந்தை இறந்த பிறகு, அந்த திதி நாட்களில் அவருக்கு படையல் இட்டு படத்திற்கு பூமாலை சாற்றி வழிபடும் போது, இங்குதான் சனாதன தர்மம் வாழ்கிறது. அதாவது என்னை இந்த உலகத்தில் அறிமுகப்படுத்திய இறைவன் என்னுடைய தந்தை. அவரை நான் கடவுளாக வழிபடுகிறேன். இப்படி சனாதன தர்மம் வாழ்வியலோடு கலந்தது அதை பிரிக்க முடியாது.
அரசியல் வேறு, சனாதன தர்மம் வேறு, இந்து கலாச்சாரம் வேறு, ஜாதி வேறு, மதம் வேறு, ஆனால் அரசியலுக்காக எப்படியும் பேசலாம் என்று உதயநிதி பேசிய பேச்சால் ,இந்தியா மட்டுமல்ல உலக அளவில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதை வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்கி விடுவார்கள் என்பது உறுதி.
ஏனென்றால் நீங்கள் இதை வைத்து அரசியல் லாபம் அடையலாம் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு ,எதிர்க்கட்சிகளுக்கும் ,பிஜேபிக்கும் அது லாபம் ஆகிவிட்டது. மேலும், இந்தியா கூட்டணியில் கூட உள்ள கட்சிகள் வட இந்தியாவில் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் எல்லா மதத்தையும் நாங்கள் மதிக்கிறோம் என்கிறார்கள். அதனால், உதயநிதியின் பேச்சு எந்த அளவிற்கு அரசியலில் அது ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது வருங்காலத்தில் தெரியும்.
அந்த காலத்தில் அதாவது தாத்தா காலத்தில் அது படிப்பறிவு இல்லாத காலம். இந்த காலம் செல்போனில் எல்லாவற்றையும் படித்து விடுகிறார்கள். இதையெல்லாம் புரியாமல், தெரியாமல் பேசிவிட்டார். இனியாவது சனாதன தர்மம் என்றால், குறிப்பிட்ட சில ஜாதிக்கு உரித்தானது அல்ல என்பதை திமுக அரசியல் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி.