சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பக்தி வைராக்கியத்துடன் செல்லவில்லை என்றால் இடையூறுகள் ஏற்படும் என்கிறார் – இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் உழவாரப்பணி.

ஆன்மீகம் இந்தியா சமூகம் டிராவல் ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சென்னை குமார் ஐயப்பன் குருசாமி சுமார் 45 தடவைக்கு மேல் ஐயப்பன் மலைக்கு சென்று வந்துள்ளார் அவர் சொல்வது ஐயப்பனிடம் முறையான பக்தி ,ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் .அப்படி கடைப்பிடித்து செல்பவர்களுக்கு இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.

 ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகள் அது ஆன்மீக பக்தர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல், வேதனை, ஐயப்பனை நம்பி கோயிலுக்கு வந்து, இப்படி நடந்து விட்டது என்று அவர்கள் மனதார எவ்வளவு வேதனைப்படுவார்கள் ? இது ஒரு புறம் .ஆனால், அரசியல் என்பது கேரளாவில் தெய்வ பக்தியுடன் வரும் பக்தர்களிடம், மதப் பிரிவினைகளை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அதாவது ஒரு பக்கம் ஐயப்பன் தேவஸ்தான போர்டுக்கும் ,கேரளா முதல்வர் பினராய் விஜயன் இருவருக்கும் முதலில் அரசியல் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த அரசியலுக்குள் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழும் போது அதை கேரள அரசு அரசியலாகப் பார்க்கிறது. மேலும், ஐயப்ப பக்தர்களை அடிப்பது, அவர்களை சிறையில் அடைப்பது, போன்ற தவறான செயல்கள் தெய்வ நம்பிக்கையை சீர்குலைப்பதாகும்.

மேலும் தெய்வ நம்பிக்கை என்பது எத்தனை சோதனைகள், வேதனைகள், வந்தாலும், அதை ஏற்றுக்கொள்வதுதான் அந்த தெய்வத்திடம் நா ம் காட்டும் உண்மையான பக்தி .ஒரு பக்த னுக்கு எத்தனை சோதனைகள் ,எத்தனை இடையூறுகள் வந்தாலும், தெய்வம் ஒருபோதும் கைவிடாது .

அப்படிப்பட்ட தெய்வத்தை அய்யப்ப பக்தர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ,இந்த பிரச்சனைகளால், அதுவும் ஏதோ ஒரு காலத்தின் கட்டாயத்தில் நிகழ்ந்தது என்று ஏற்றுக் கொள்வது ஐயப்பன் மீது உள்ள பக்தி ஒருபோதும் வீணாகாது . மேலும் இது தொடர்பாக கேரள அரசு மீது வழக்கு தொடரவும், இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது .

அதனால்,பாதிக்கப்பட்டவர்கள் தெய்வத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்க வேண்டாம். அது நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களை திரும்பிப் பார்க்கும். என்கிறார் இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் உழவாரப்பணி சென்னை குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *