கேரளா ஸ்டோரி திரைப்படம் உண்மையிலே நடந்த கதை தான் ,அதை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் ,திமுக, நாம் தமிழர் கட்சி சீமான் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி, இவை எல்லாம் நாட்டின் பிரிவினைவாத சக்திகளை ஊக்கி வைக்கிறார்களா?
இந்த படத்தில் இந்து மதத்தையோ அல்லது கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பலர் எப்படி மதமாற்றம் செய்து அவர்களை வெளிநாடுகளில் அல்லது இந்தியாவில் தீவிரவாதிகளாக மூளைச் செலவு செய்கிறார்கள்? என்பது தான், இப்படத்தின் கருத்து . இது பற்றி பல படங்கள் வெளிவந்துள்ளது. விஸ்வரூபம் என்ற படமும், இதன் அடிப்படையில் அமைந்துள்ளது தான். மேலும்,
இதுபோல் அரசியல் கட்சிகள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பேசுகிறார்கள். இந்த பேச்சு ஒன்று இவர்களுக்கு சாதகமாக இருந்தால் வரவேற்கிறார்கள். அல்லது இவர்களுடைய கொள்கைக்கு அது மாறாக இருந்தால், எதிர்க்கிறார்கள். இதில் எதிர்ப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், இது கேரளாவில் நடந்த சம்பவம், அதை மையப்படுத்தி திரைப்படம் எடுத்திருக்கிறார்கள்.
இது பார்க்க போனால், கட்டாய மதமாற்றம் என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. இதற்கு ஏன் இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? ஒருவேளை இவர்கள் கட்டாயம் மதம் மாற்றத்திற்கு ஆதரவாக இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. மேலும்
மதம் என்பது ஒரு புனிதமான கடவுளை வழிபடும் மார்க்கம் .அது அவரவர் என்ன மதத்தில் பிறந்திருக்கிறார்களோ, அந்த மதத்தில் அதன் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, கடவுளை வணங்குகிறார்கள் .ஆனால், பிறப்பால், கிறிஸ்தவர்கள், அல்லது வேறு மதங்களில் பிறந்தவர்கள், வேறு ஜாதிகளில் பிறந்தவர்கள், தமிழக மக்களை முட்டாளாக்குவதற்காக, தன்னை இந்து என்று கூறிக் கொள்ளும் சீமான், இவருடைய பழைய மதம் கிருத்துவம், அதனால்தான் மதமாற்றத்தை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் இவர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களா? மேலும்,
இந்த மதமாற்றம் எதற்காக நடத்துகிறார்கள்? அதன் அவசியம் என்ன ?மதம் மாறியவர்களுக்காவது இந்த உண்மை தெரியுமா? தெரிந்து கொள்வது நல்லது. இது ஏனென்றால், தன்னுடைய மதத்திற்கு அதிக மக்களை நாம் மாற்றிவிட்டால் ,அதை வைத்து அரசியல் ஆட்சியை பிடித்து விடலாம். மேலும் ,எந்த கட்சி அரசியல் வந்தாலும், நாம் சொல்வதை தான் அவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி விடலாம். இதுதான் கட்டாயம் மதம் மாற்றத்தின் முக்கிய நோக்கம்.
மேலும், கேரளா ஸ்டோரி மதமாற்றத்தை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் தமிழ்நாட்டு திரையரங்குகளில் வெளியிடுவதை எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அந்த வரிசையில், சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன .இதன் அடிப்படை உண்மை என்னவென்றால் ,கட்டாய மதமாற்றம் நாட்டில் தவறான ஒன்று என்று சட்டமே இயற்றி இருக்கும் போது, இவர்கள் எப்படி இதை ஆதரிக்கலாம் என்பதுதான் பொதுமக்களின் முக்கிய கேள்வி?