ஆகஸ்ட் 16, 2024 • Makkal Adhikaram
நாமக்கல் மாவட்டம். பள்ளிப்பாளையம், சமயசங்கிலி பகுதியில், சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.மேலும்,
பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, சமயசங்கிலி கிராம சபை கூட்டத்தில் , சாய ஆலைகளில் இருந்து வெளியேறும், சாயகழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது.
இது குறித்து, குமாரபாளையம் மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை, ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் மாசுகட்டுபாட்டுவாரிய அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், அதிகாரிகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூட்டத்திற்கு வர வேண்டும். அதுவரை ஒத்தி வைக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து யூனியன் அதிகாரிகள், போலீசார் வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க முடியாது, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். உங்களின் கோரிக்கையை மனுவாக கொடுங்கள், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். இதன் பிறகு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.