சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் போதிய பஸ் வசதி இல்லாமல் பக்தர்கள் தவிப்பு .

அரசியல் ஆன்மீகம் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 24, 2024 • Makkal Adhikaram

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி ,சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சித்ரா பௌர்ணமிக்கு நேற்று வந்த பக்தர்கள் கூட்டம் அதிகப்படியானது என்று பக்தர்கள் பேசி வந்தனர்.

 மேலும், திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் கூட்டம் தள்ளு முள்ளு நெருக்கடியிலே கிரிவலம் சென்றுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் நேற்று சித்திரா பௌர்ணமி தரிசனம் காண்பதற்காக வந்துள்ளனர் . சுமார் பத்து லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய இந்த சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட அமைச்சர் வேலு என்ன செய்தார் என்று தான் பொதுமக்கள் கேள்வி? 

அதுமட்டுமல்ல,இந்த அண்ணாமலையார் திருத் தலத்திற்கு சரியான பஸ் வசதி இல்லை . அதனால், பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்துள்ளனர். ஒரு பக்கம் போக்குவரத்து சரி செய்யவில்லை . அதாவது ஐந்து கிலோ மீட்டருக்கு முன்னாலே பஸ் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து மக்கள் இலவச மினி பேருந்து மற்றும் ஆட்டோ இவைகளின் மூலம் கோயிலுக்கு கிரிவலம் சென்றுள்ளனர் . இவையெல்லாம் தேவையற்றது. பிறகு இரவு கிரிவலப் பாதை இறங்கும் வழியில் அதே பஸ்களை இயக்கி உள்ளனர். இப்படி எதையும் முறையாக செய்வதில்லை. 

இது தவிர, இந்த அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ரயில் நிலையம் இருந்தும், ரயில் போக்குவரத்து வசதியை அமைச்சர் வேலு ஏன் அதை செய்யவில்லை ? சொந்தத் தொகுதியில், சொந்த ஊரிலே இந்த லட்சணம் என்றால், மற்றவை எப்படி இருக்கும் ? இதையெல்லாம் செய்யாமல் அமைச்சர் வேலு, இந்து மதத்திற்கு எதிரான தேவையில்லாத ஒன்றை செய்து வருகிறார். அது என்ன என்றால்? கிரிவலப் பாதையில் கருணாநிதியின் சிலையை வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். 

அதாவது கிரிவலப் பாதை அண்ணாமலையாரின் இடம். அந்த இடத்தில் ஒரு டிரஸ்ட் பெயரில் உள்ள இடத்தில், சிலையை நிறுவ வேண்டுமென்றால், சட்டப்படி நீதிமன்றம் தான், இப்படிப்பட்ட விஷயத்தை முடிவு செய்ய முடியும். இதில் உள்ள சட்ட சிக்கல் கூட தெரியவில்லை. தெரியாமல் செய்து கொண்டிருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமல்லாமல், இது ஆன்மீக பூமி, இந்த ஆன்மீக பூமியில் கடவுள் மறுப்பாளரை கொண்டு வந்து இங்கே எதற்கு வைக்கிறீர்கள்? என்பது தான் ஆன்மீக அன்பர்களின் முக்கிய கேள்வி?

அதுமட்டுமல்ல, தினந்தோறும் சித்தர்கள், மகான்கள் செல்லுகின்ற இந்த கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலையை வைத்துப் பார்க்கட்டும் அன்றே அவர்களுக்கு பீடைப் பிடித்தது என்கிறார்கள். திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் கோபம் விரைவில் திமுகவிற்கு உண்டு என்கிறார்கள் ஆன்மீகவாதிகள் . கருணாநிதி தமிழ்நாட்டுக்கு செய்த தியாகம் என்ன? தியாகிகளுக்கே முக்கியத்துவம் இல்லை. தியாகிகளை போற்றுவதற்கு நினைப்பதற்கு ஆள் இல்லை .கருணாநிதியால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவில் கிடைத்த அரசியல் பொக்கிஷம்,ரவுடியிசம், ஊழல். மற்றும் மது கடைகள் திறந்தது . 

இதுதான் கருணாநிதியின் அரசியல் வரலாறு . அதனால் கருணாநிதியின் சிலை இந்த ஆன்மீக பூமியில் ஒரு காலம் வேலுவின் கனவு நிறைவேறாது என்கின்றனர்- திருவண்ணாமலை மாவட்ட மக்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *