
சிறிய பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மத்திய மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவது, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று. மேலும்,இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஆசிரியர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசும்போது,
நாட்டில் சிறிய பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் ஒரு அங்கீகாரம் இல்லாமல், உண்மையான செய்திகளை வெளியிட்டாலும், அதைப்பற்றி அலட்சியம் காட்டும் அதிகாரிகள் ,மேலும், இதற்கான சலுகை விளம்பரங்கள் ,கொடுக்காமல் ஒரு போராட்டத்தின் உச்சகட்டத்தில் தான், இந்த பத்திரிகைகள் இருந்து வருகிறது.
இந்த பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் அதிகாரம் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்திகளை இணையதளம் மற்றும் பத்திரிகையில் வெளியிட்டு வருகிறது. இதில் ஒளிந்திருக்கும் உண்மை பத்திரிக்கை உலகத்திற்கு தெரியாத ஒன்று. அது என்னவென்றால்,கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் வியாபார நோக்கத்திலும், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகையாகவும் நடத்தினால் கூட ,அவர்களுக்கு சர்குலேஷன் என்ற ஒரு விதிமுறையை வைத்து ,சலுகை, விளம்பரங்கள் கொடுத்து வருகிறது.
மேலும், இந்த சிறிய பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் என்ற விதிமுறையை தூக்கி எறிந்து ,சப்ஜெக்ட் உள்ள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். தவிர, மக்களின் நன்மைக்காக, மக்களின் வரிப்பணத்தில் கொடுப்பது தவறில்லை. அதேபோல், கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளும், அந்த பத்திரிகைகளுக்கான சலுகை ,விளம்பரங்கள் சர்குலேஷன் என்ற அடிப்படையில் இருந்து மாற்றம் கொண்டு வர வேண்டும். அது ஒரு தவறான விதிமுறை .
சர்குலேஷன் என்பது பணத்தால் காட்ட முடியும். பணத்துக்கு அடிப்படை சர்குலேஷன். அந்த சர்குலேஷனுக்கு அடிப்படை சலுகை, விளம்பரங்கள் இப்படி ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருப்பது ,இதுவரையில் இந்த பத்திரிகை உலகத்திற்கு தெரியாத ஒன்று. அதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது மக்கள் அதிகாரம் பத்திரிகை. தவிர இது,
சிறிய பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் மத்திய மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று. மேலும்,எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை நடத்துகிறோம்? அதன் அடிப்படை யே, உண்மையான செய்திகள் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தான், பத்திரிகைகளின் முக்கிய நோக்கம். அந்த நோக்கம் வியாபார தன்மையாகவும், முழு அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகையாகவும், அதற்கு எப்படி அரசு அதிகாரிகள், விளம்பரம் கொடுக்கிறார்கள்?
இதற்கெல்லாம் ஒரு விடியலாக (All India small newspaper association – A gazette notified by National press council of India ) NPI .ல்,இந்த சிறிய பத்திரிகைகள் ஒன்று சேர வேண்டும். அந்த ஒற்றுமையின் அடிப்படையில் தான், இதற்கெல்லாம் ஒரு விடியலை பத்திரிகை துறையில் நாம் கொண்டுவர முடியும். எத்தனையோ உண்மையான சமூக பத்திரிகையாளர்கள், இந்தப் போராட்டத்தில் பத்திரிகை நடத்த முடியாமல் விலகி இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த ஆல் இந்தியா சுமால் நியூஸ் பேப்பர்ஸ் அசோசியேசன் (all India small newspaper association) போராட்டத்திற்கான ஒரு விடியலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
%20(1)%20(1).jpg)
மேலும்,சிறு பத்திரிகையாளர்கள் எந்த விதமான ஈகோ பிரச்சனையும் பார்க்காமல், இந்த நேஷனல் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா (National press council of India) அங்கீகாரம் பெற்ற இந்த அமைப்பில் ஒன்றிணைந்து போராடுவோம். அதற்கான நற்பலனை நிச்சயம் மத்திய மாநில அரசுகள் மூலம் பெற்று தர முடியும். அந்த நம்பிக்கையை தென்னிந்திய தலைவர் ஸ்ரீராம் சுவாமிஜி தெரிவித்துள்ளார். அவருடைய தலைமையில் தான், நேற்று ஹோட்டல் டால்பின் பார்க்கில் சிறிய பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் சில பத்திரிகை சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த கூட்டத்தில் சிவயோகி மவுரியன், தமிழ்நாடு மாநில தலைவராக ஸ்ரீராம் சுவாமிஜி அவர்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் ராஜேந்திரன்,கல்வி பார்வை ஆசிரியர் ஜெகதீசன், அகில இந்திய மோடி மக்கள் மன்றம் நிறுவனத் தலைவர் கராத்தே ராமச்சந்திரன் மற்றும் செய்தியாளர்கள் தேன்மொழி,ஏ என் சேதுராமன், சிங்கம்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.