ஜூலை 06, 2024 • Makkal Adhikaram
செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் 100 பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாக வைத்திருந்தான். நீங்கள் செங்கோல் வைத்திருப்பதால் இந்த நாட்டு பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?இவருடைய கேள்வியில் இப்படி எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் எல்லாம் எத்தனை பெண்களை வைத்துக் கொள்ளப் போகிறீர்கள்? என்ற அர்த்தமா? இந்த கேள்விக்கு அரசியலை படித்தவர்கள்,தெரிந்தவர்கள் நன்றாக சூடு கொடுப்பார்கள்.
மேலும் ஆதீனங்கள் ஆண்டவனிடம் முறையிட வேண்டும் இதை பற்றி வெங்கடேசன் எம்பி இடம் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை . இறைவனே கதி என்று வாழக்கூடிய ஆதீனங்கள் இறைவனிடம் முறையிடங்கள் அங்கே அவருடைய சட்டத்தில் என்ன தண்டனையோ இறைவன் கொடுக்கட்டும் . அதை விட்டுவிட்டு இழிவாகப் பேசுவது அறிவான செயலா? என்று அவருக்கு அறிவுரை கூறக்கூடாது .
உங்களுடைய தகுதியை வெங்கடேசன் எம்பி இடம் குறைத்துக் கொள்ளக் கூடாது. பதவி அதிகாரம் எல்லாம் ஒருவருக்கு கடவுள் போட்ட பிச்சை அதை வைத்து ஆடிக் கொண்டிருப்பவர்கள். அதனால் இதை ஆண்டவனிடமே நீ ஒருவருக்கு கொடுத்த பிச்சை என்ற ஒரு பதவி இன்று தவறான முறையில் இந்துக்களின் ஆன்மீகமும் அரசியலும் கலந்த ஒரு சின்னத்தை பற்றி இழிவாக பேசியிருப்பதற்கு இயற்கை என்ற ஒரு இறைவன் கண்ணுக்குத் தெரியாத ஒரு கடவுள் அதற்கு என்ன தண்டனையோ அவன் கொடுக்கட்டும் .
மேலும், அரசியலில் எல்லாம் தெரிந்த மேதையாக செங்கோலை பற்றி வெங்கடேசன் எம்பி பேசியது இந்துக்களை கேவலப்படுத்தும் பேச்சு .மேலும் இந்துக்கள் வாக்களித்து பதவியில் உட்கார வைத்தாலும், புத்தி தரம் தாழ்ந்த புத்தி இப்படி தான் சிந்திக்கும். எவ்வளவு பெரிய பதவியில் கொண்டு போய் இவர்களை உட்கார வைத்தாலும், இவர்களுடைய கீழ்த்தரமான புத்தி இப்படித்தான் சிந்திக்குமா? மேலும்,
எந்த வேலைக்காக உன்னை மக்கள் வாக்களித்து ஒரு எம்பி ஆக்கி, இந்த தொகுதிக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் .
அங்கே போய் செங்கோலை பற்றி பேசி நேரத்தை வீணடித்து விட்டு வருவது ஒரு நாடாளுமன்ற எம்பிக்கு இதுவா வேலை ? மேலும், இவர் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராகி இவர் தொகுதிக்கு எத்தனை முறை வந்தார் ? என்னென்ன திட்டங்கள் இவர் தொகுதியில் செய்தார் ? தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன? அதில் எதை நிறைவேற்றினார்? எதை நிறைவேற்றவில்லை? இதய பற்றி எல்லாம் மக்கள் இவரை கேள்வி கேட்டிருந்தால், நாடாளுமன்றத்தில் போய் உட்கார்ந்து கொண்டு, இப்படிப்பட்ட தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்க மாட்டார்கள்.
மேலும் இது மன்னர் ஆட்சியா? அல்லது மக்களாட்சியான்னு கூட தெரியாமல் பேசிக் கொண்டிருக்கும் இவரை, கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகள் பாராட்டும் .ஆனால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் ஒருவர் சமுதாயத்திற்கு சேவை செய்ய வந்து, பெண்களைப் பற்றி தரக்குறைவாக பேசுவது குறித்து,மக்களிடம் இது பற்றி கொண்டு சொல்வது மட்டுமல்ல, வாக்களித்தஒவ்வொரு இந்துக்களும் சிந்திக்க வேண்டும். இவருக்கு வாக்களித்ததற்கு வெட்கப்பட வேண்டும் .வேதனைப்பட வேண்டும்.
ஏதோ அரசியல் என்றால் என்ன என்று தெரியாது. நாட்டில் பாட்டிலுக்கும், பிரியாணிக்கும், பணத்திற்கும் ஓட்டு போடுபவன் இருக்கும் வரை இவர்களெல்லாம் வந்தவரையும் பேசிவிட்டு எதற்கு தேர்ந்தெடுக்க பட்டோம் என்று கூட தெரியாதவன் எல்லாம் எம்பி .அரசியல் தெரியாத முட்டாள்கள் அதிகமாக இருந்தால், எம்பி, எம்எல்ஏக்கள் வாய்க்கு வந்தவரை பேசிக் கொண்டிருப்பார்கள். யார் இவர்களை கேட்க போகிறார்கள்?