தமிழக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வு துறைகளில் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜியை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஆனால், திமுக தரப்பில் உள்ள வழக்கறிஞர்கள் டீம் அது சட்டப்படி செல்லாது என்கிறார்கள். இது தவிர ,அவரை பதவி நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். ஆளுநர் ஆர் என் ரவி அவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது .தொடர்ந்து மேலும் பல குற்ற வழக்குகள் மாநில காவல்துறை அதிகாரிகளின் விசாரணை நிலுவையில் உள்ளது. அவருடைய பதவி நீக்கம் சட்டப்படி செல்லும்.
திமுக தரப்பு லீகல் டீம் சொல்வதை வைத்து அல்லது சில பத்திரிகைகள் கொடுக்கின்ற தீர்ப்புகளை வைத்தோ செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி நீக்கப்பட்டு இருப்பது, அது சாதாரண குற்ற வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், இவர்கள் சொல்வது மூன்று ஆண்டுகளோ அல்லது நாண்கு ஆண்டுகளே சிறை தண்டனை பெற்ற ஒருவரை தான் பதவியில் இருந்து நீக்க முடியும். குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் போது நீக்க முடியாது என்பது இவர்களுடைய வாதம். இது குற்ற வழக்கின் தன்மையை பொறுத்தது தான் இங்கே.
இவர் மீது அமலாக்க துறையின் மூலம் சட்டத்திற்கு புறம்பான வகையில் பணம் பரிவர்த்தனை வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தவிர, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டுள்ள குற்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இப்படி பல குற்ற வழக்குகள் ஒருவர் மீது இருப்பதால், அவர் சட்டப்படி அமைச்சராக பதவி வகிப்பதற்கு தகுதியானவர் இல்லை என்பது குறித்து ஆளுநர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இனி அவர் அந்த பதவிக்கு தகுதியானவர் தானா? இல்லை தகுதியாற்றவர் தானா? என்பதை நிரூபிக்க அவர் நீதிமன்றம் தான் செல்ல வேண்டும் .மேலும் இவருடைய இலாக்காக்கள் வேறு சில அமைச்சர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரை இலாக்க இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சராவையில் இருந்து வருவது சட்ட சிக்கல் உருவாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று. மேலும் கவர்னருக்கு அந்த அதிகாரம் இல்லை என்கிறார்கள் ,திமுக லீகல் டீம். பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநருக்கு, பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமும் உண்டு.
இனி செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பது அதற்கு தகுதியானவர் தானா? என்பதை நீதிமன்றத்தில் தான் அதை முடிவு செய்ய முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லை என்பதை முதல்வரே அதை நீக்கி இருக்க வேண்டும். அவர் செய்யவில்லை. கவர்னர் அதை செய்து விட்டார்.
%20(1)%20(1).jpg)