செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நினைத்தால்! அது சட்டமன்ற மாண்புக்கும், சட்டத்துக்கும் புறம்பானது.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமலாகத்துறை செந்தில் பாலாஜியை முறைப்படி விசாரித்து சட்டப்படி அவரை கைது செய்துள்ளது. கைதின்போதே செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்துவிட்டதாக துடித்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவர் சேர்க்கப்பட்டது பல்நோக்கு மருத்துவமனை, அங்கு எல்லா உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ கருவிகள் உள்ளது .இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. இந்த உத்தரவு நீதிமன்றத்தில் சாமானிய மக்களுக்கு கிடைக்காது. நீதிமன்றம் சலுகை காட்டக்கூடாது.

சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம், ஆட்சியாளர்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலைமை தமிழ்நாட்டில் இருக்கிற வரை ஊழல்வாதிகள் சட்டத்தை மதிக்க மாட்டார்கள். அதை நீதிமன்றமும், நீதிபதிகளும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் இவர் என்ன தவறு செய்திருக்கிறார்? அதன் முழு விவரத்தை அமலாக்கத்துறை வெளியிடவில்லை. இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கைது நடவடிக்கையில் திமுக அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை ஒரு போலியான நாடக பிம்பத்தை அரங்கேற்றி வருகிறார்கள். அது தவறு. மக்களுக்கு பணியாற்ற வந்த ஒரு அமைச்சர், எப்படி ஒரு சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்யலாம்? இதைப் பற்றி மக்களுக்கு தெரியாது என்று பேசக்கூடாது.

 எதிர்க்கட்சியாக இருக்கும் போது முதல்வர் ஸ்டாலின் பேசியது, தற்போது ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது ஆட்சி அதிகாரம் வந்து விட்டது என்று பேசக்கூடாது. ஆட்சி அதிகாரம் எல்லாம் மக்கள் கொடுத்த ஒரு அதிகாரம். அது நிலையானது அல்ல. நேற்று அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள், இன்று திமுகவிற்கு வாக்களித்து இருக்கிறார்கள். நாளை அதே மக்கள் பிஜேபிக்கு வாக்களிப்பார்கள். இது காலத்தின் சுழற்சி. ஆட்சி என்பது நிலையானது அல்ல என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

தவறு செய்த செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் ,அதில் சட்ட சிக்கல் உருவாகும் என்பது உறுதி.இதற்கிடையில் அமலாக்கத்துறை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு மூலம் பரிசோதிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அப்படி என்றால் இந்த நாடகம் அமலாக துறைக்கு புரிந்து விட்டதா ? மேலும் 355 – ஆவது பிரிவை பயன்படுத்தி சட்டமன்றத்தை முடக்க கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அரசுக்கு இங்கு சட்டப்படி ஆட்சி நடக்கவில்லை என்று அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *