சென்னையில் ஒரு நாள் மழைக்கே மக்கள் மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் முட்டிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதில் என்ன கொடுமை என்றால், சென்னையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் மழை நீர் உள்ளே புகுந்துள்ளது.மழைக்காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது .
மேலும், மக்களுக்கு இது இன்னும் அதிகளவில் மழை பெய்தால் என்ன ஆகுமோ?என்ற ஒரு அச்சம், இப்படி தான் சென்னைவாசிகளின் மழைக்காலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? தமிழக அரசு இந்த மழை நீர் வடிகால் திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து 4000 கோடி என்ன ஆனது? என்று சமூக வலைத்தளத்தில் மக்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்புகிறார்கள்? இன்னொரு பக்கம் அரசு அதற்கு படிப்படியாக தான் வேலை நடந்து வருகிறது என்று தெரிவிக்கிறார்கள்.மேலும்,
தமிழக அரசு இந்த வேலை எந்த அளவுக்கு நடந்தது?. இந்த மழை நீர் வடிகால் திட்டம் இதுவரை, எந்த பகுதியில் எந்த அளவுக்கு முடிந்துள்ளது? எவ்வளவு பர்சன்டேஜ் அளவு நடந்துள்ளது? எத்தனை கோடிகள் அதற்கு செலவிடப்பட்டது? என்ற ஒரு தகவல், தமிழக அரசிடம் இருந்து இதுவரை வெளிப்படையாக வரவில்லை . எதிலும் திமுக அரசு திட்டம் போட்டு தான்,செயல்படுவார்கள். திட்டம் போடாமல் எதையும் செயல்பட மாட்டார்கள். அதனால், மக்களுக்கு அதைப் பற்றி சொல்லும் தகவல் நம்ப முடியாத தகவலாக உள்ளது .
மேலும், இதையெல்லாம் போட்டோ சூட் செய்து நமது பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் காண்பித்துக் கொண்டிருக்கும். அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள் .அதனால், அவர்களுக்கு மட்டும் அந்த சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இல்லையென்றால் அந்த ஃபோட்டோ ஷூட் வேலை செய்ய மாட்டார்கள்.
மேலும், 19 65 முதல் இதுவரை அதாவது திமுக, அதிமுக ஆட்சியில் சென்னையில் இருந்த குளம் ,குட்டை நீர் நிலைகள் உள்ள பொதுப்பணி துறையின், தற்போதப நீர்வளத் துறையின் வரைபடத்தில் ஆரம்பத்தில் இருந்தது எத்தனை ?10 ஆண்டுகள் கழித்து இருந்தது எத்தனை? அதற்கு 20 ஆண்டுகள் கழித்து எத்தனை காணாமல் போனது? இப்படி ஒவ்வொன்றும், ஒரு சர்வே எடுத்தால் இது சென்னை நகர மக்களுக்கு இந்த உண்மை புரியவரும் என்று ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் சொன்ன தகவல்.
இது மக்கள் செய்த தவறு. மக்களின் சாபக்கேடு அதிமுக, திமுக என மாற்றி, மாற்றி வாக்களித்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அது அவர்கள் மேல் குற்றம் இல்லை. ஏனென்றால் 50 ஆண்டு காலமாக செய்யாதது இப்போது செய்து விடப் போகிறார்களா? இந்த மழையாவது சென்னை மக்களை சிந்திக்க வைக்குமா? என்பதுதான் சமூக ஆர்வலர்கள் சொல்லும் ஒரு முக்கிய உண்மை .